Published : 18 Mar 2015 09:52 AM
Last Updated : 18 Mar 2015 09:52 AM

திருநெல்வேலி, நாகர்கோவில், திருவனந்தபுரம், எர்ணாகுளத்துக்கு சிறப்பு, பிரீமியம் ரயில்கள்: முன்பதிவு இன்று தொடக்கம்

பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்க திருநெல்வேலி, நாகர்கோவில், திருவனந்த புரம், எர்ணாகுளம் ஆகிய ஊர்களுக்கு சிறப்பு ரயில்கள் மற்றும் பிரீமியம் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதற்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது.

இதுகுறித்து, தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்க சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதன்படி, ஏப்ரல் 1, 2-ம் தேதிகளில் திரு நெல்வேலி-சென்னை எழும்பூர் இடையே சிறப்பு ரயில் (வண்டி எண்.06028/06029) இயக்கப் படுகிறது. இந்த ரயில் அதிகாலை 5 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு அன்று இரவு 7 மணிக்கு எழும்பூர் வந்த டையும். ஏப்ரல் 4-ம் தேதி தேதி திருநெல்வேலி-எழும்பூர் இடையே சிறப்பு ரயில் (06030) இயக்கப்படுகிறது. இந்த ரயில் திருநெல்வேலியில் மாலை 6.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.15 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.

ஏப்ரல் 5-ம் தேதி சென்னை எழும்பூர்-திருநெல்வேலி இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் (06031), எழும்பூரில் இருந்து மதியம் 3 மணிக்கு புறப் பட்டு மறுநாள் அதிகாலை 3 மணிக்கு திருநெல்வேலி சென்ற டையும். ஏப்ரல் 29-ம் தேதி திரு நெல்வேலி-எழும்பூர் இடையே அதிவிரைவு ரயில் (06032) இயக்கப்படுகிறது. இந்த ரயில் திருநெல்வேலியில் மாலை 6.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.15 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.

இதேபோல், திருவனந்தபுரம்-சென்னை சென்ட்ரல் இடையே ஏப்ரல் 1 மற்றும் 29-ம் தேதிகளில் சிறப்பு ரயில் (வண்டி எண்.06033) இயக்கப்படுகிறது. இந்த ரயில் திருவனந்தபுரத்தில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.40 மணிக்கு சென்ட்ரல் வந்தடையும்.

சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம் இடையே ஏப்ரல் 2 மற்றும் 30-ம் தேதிகளில் சிறப்பு ரயில் (06034) இயக்கப்படுகிறது. இந்த ரயில் சென்ட்ரலில் இருந்து மாலை 6.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11 மணிக்கு திருவனந்தபுரம் வந்தடையும்.

எர்ணாகுளம்-சென்னை சென்ட்ரல் இடையே (06035) ஏப்ரல் 9-ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் எர்ணாகுளத்தில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.15 மணிக்கு சென்ட்ரல் வந்தடையும். சென்னை சென்ட் ரல்-எர்ணாகுளம் இடையே (06036) ஏப்ரல் 10-ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் சென்ட்ரலில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.50 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்.

சென்னை எழும்பூர்-நாகர் கோவில் இடையே (06038) ஏப்ரல் 6-ம் தேதி இயக்கப்படும் சிறப்பு ரயில் எழும்பூரில் இருந்து மதியம் 3 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.15 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.

பிரீமியம் ரயில்

சென்னை எழும்பூர்-திருநெல் வேலி இடையே பிரீமியம் ரயில் (00610/00611) ஏப்ரல் 1, 2-ம் தேதிகளில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் எழும்பூரில் இருந்து இரவு 9.05 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.05 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். இதற்கான முன்பதிவு இன்று (18ம் தேதி) தொடங்குகிறது.

நாகர்கோவில்-எழும்பூர் இடையே பிரீமியம் ரயில் (00613) ஏப்ரல் 5-ம் தேதி இயக்கப்படுகிறது. இந்த ரயில் நாகர்கோவிலில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.20 மணிக்கு எழும்பூர் வந்தடையும். இதற்கான முன் பதிவு மார்ச் 21-ம் தேதி தொடங்கு கிறது.

சென்னை எழும்பூர்-திருநெல் வேலி இடையே பிரீமியம் ரயில் (00612) ஏப்ரல் 30-ம் தேதி இயக்கப்படுகிறது. இந்த ரயில் எழும்பூரில் இருந்து இரவு 9.05 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.05 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். இதற்கான முன்பதிவு ஏப்ரல் 15-ம் தேதி தொடங்குகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x