Published : 17 Mar 2015 08:27 AM
Last Updated : 17 Mar 2015 08:27 AM

காவிரியின் குறுக்கே கர்நாடகம் அணை கட்டும் விவகாரம்: சென்னையில் 21-ல் அனைத்துக்கட்சி கூட்டம்

காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டுவது தொடர் பாக விவாதிக்க சென்னையில் 21-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு டெல்டா பகுதி விவசாயிகள் ஏற்பாடு செய்துள் ளனர்.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு, ராசிமணல் ஆகிய இடங்களில் புதிய அணைகளை கட்டப்போவதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது. அணை கட்டினால் விவசாயம் பாதிக் கப்படும். எனவே, கர்நாடக அரசின் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழக டெல்டா விவசாயிகள் கோரி வருகின்றனர். ஆனால், அணை கட்டுவதில் கர் நாடக அரசு உறுதியாக உள்ளது. இதற்காக அம்மாநில பட்ஜெட்டில் ரூ.25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக பிரதமரைச் சந்தித்து வலியுறுத்துவதற்காக தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் குழு டெல்லிக்கு செல்ல வேண்டும் என்று டெல்டா விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின் றனர். தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலை காரணமாக அத்தகைய ஏற்பாடுகளை யாரும் மேற்கொள்ளவில்லை. இதனால், டெல்டா விவசாயிகளே அனைத் துக்கட்சிக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

பி.ஆர்.பாண்டியன் தலைமை யிலான தஞ்சாவூர், நாகப் பட்டினம், திருவாரூர் அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங் கிணைப்புக் குழுவினர் சென்னை யில் முகாமிட்டு, கட்சித் தலைவர் களை சந்தித்து வருகின்றனர். ராயப்பேட்டையில் உள்ள எம்.எஸ்.மஹாலில் 21-ம் தேதி இந்தக் கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ள னர். இது குறித்து ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது:

முதலில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்துக்கு சென்று அழைப்புக் கடிதம் வழங்கினோம். அதிமுக சார்பில் அதன் தலைவர்கள் யாரேனும் நிச்சயம் பங்கேற்பார்கள் என நம்புகிறோம். திமுக சார்பில் மூத்த நிர்வாகிகளை அனுப்பி வைப்பதாக மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோரும் பிரதிநிதிகளை அனுப்புவதாக கூறியுள்ளனர்.

தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தானே வருவதாக தெரிவித்தார். தமாகா மூத்த தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமா வளவன் ஆகியோரையும் சந்தித்துப் பேசினோம். தேமுதிக, பாஜக, சமக மற்றும் இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் தலைவர்களையும் சந்திக்க உள்ளோம்.

காவிரி டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரங்களை பாதுகாப்ப தற்கான இந்தப் போராட்டத்தில் தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்று சேர்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு பி.ஆர்.பாண்டியன் கூறினார்.

ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அவற்றையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு காவிரி பிரச்சினையில் கர்நாடக அரசியல் கட்சிகள் ஒன்று சேர்ந்து நிற்கின் றன. ஆனால் தமிழக அரசியல் கட்சிகளிடையே அத்தகைய ஒற்றுமை இல்லாதது விவசாயி களை பெரிதும் கவலை அடையச் செய்துள்ளது.

இந்தச் சூழலில் விவசாயிகள் ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதி களும் பங்கேற்றால், காவிரி பிரச்சினையில் தமிழக விவசாயி களின் உரிமைகளையும், வாழ்வா தாரங்களையும் பாதுகாப்பதற் கான சாதகமான பல தாக்கங்களை உருவாக்கலாம் என்பது நிச்சயம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x