Published : 03 Feb 2015 10:37 AM
Last Updated : 03 Feb 2015 10:37 AM

ஊழியர்களுக்கான ஓய்வூதியக் கணக்கீட்டில் 5 ஆண்டுகளாக குளறுபடி நீடிப்பு: மின்வாரியத்துக்கு கூடுதல் நஷ்டம் ஏற்படும் அபாயம்

மின் வாரியத்தில் ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு நிர்ணயித்த அளவை விட அதிகமான ஓய்வூதியத் தொகை அளித்து ள்ளதால், மின் வாரியத்துக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், இனி அதிக அளவு ஓய்வூதியம் அளித்தால், அதற்குப் பொறுப்பான அதிகாரிகளிடம் வசூல் செய்யப்படும் என்று எச்சரித்துள்ளனர்.

தமிழகத்தில் பல்வேறு அரசுத்துறைகளில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்களுக்கு முறை யான கணக்கீடு செய்து, ஓய்வூதியம் அளிக்கப்படுவதில்லை என்று புகார் எழுந்தது. இதுகுறித்து மாநில கணக்குத் தணிக்கைத் துறை நடத்திய ஆய்வில், பல்வேறு அரசுத் துறைகளில் பல ஆண்டுகளாக, அளவுக்கு அதிகமாக ஓய்வூதியம் வழங்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

தமிழகக் கருவூலத்துறை இயக்குநரகமும் தனியாக கணக்கு ஆய்வு மேற்கொண்டது.

தமிழக மின் வாரியம், உணவுப் பொருள் வழங்கல் துறை, வருவாய்த்துறை, பொதுப் பணித்துறை, வனத்துறை என பல்வேறு துறைகளில் இந்த குளறுபடிகள் நடந்துள்ளதா என ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டது.

இதன்படி, தமிழக கருவூலத் துறை இயக்குநர் வெளி யிட்ட சுற்றறிக்கையில், தமிழகத்தில் பல்வேறு கருவூலங்களிலும், அரசுத் துறைகளிலும் ஓய்வூதியம் சரியாகக் கணக்கிடப்படாமல், அளவுக்கதிகமாக வழங்கப் பட்டுள்ளது.

அதிகமான பணத்தை வசூல் செய்ய உத்தரவிட்டும், அதை துறை அதிகாரிகள், ஊழியர்கள் முறையாக செயல்படுத்த வில்லை. எனவே, இதற்குக் காரணமான ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக் கப்படும்’’ என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஓய்வூதியம் அளவுக்கு அதிகமாக வழங் கப்பட்ட விவகாரத்தில், தமிழக மின் வாரியத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக குளறுபடி நடந்திருப்பது மாநிலத் தணிக்கைக் குழு ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மின் வாரிய அதிகாரிகள், சம்பந்தப்பட்ட ஓய்வூதியர்களிடம் பணத்தைத் திரும்பப் பெற முயற்சி மேற்கொண்டுள்ளனர். ஆனால், பலர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததால், மின் வாரியத்திற்கு ஏற்பட்ட இழப்பை சரிசெய்ய முடியவில்லை.

ஏற்கனவே, சுமார் 75 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக நஷ்டத்தில் இயங்கும் மின் வாரியத்துக்கு, ஓய்வூதியக் கணக் கீட்டிலும் பல கோடி நஷ்டம் ஏற்படும் ஆபத்து உருவாகியுள்ளது. இதைத் தவிர்க்க அளவுக்கதிகமாக வழங்கப்பட்ட தொகை மற்றும் அதற்கான ஓய்வூதியர்கள் யார் என்ற பட்டியல், பிரிவு வாரியாகத் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்தப் பிரச்சினை குறித்து மின் வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, இனி தவறுகள் நடக்காமல் இருக்க உரிய உத்தரவு பிறப்பித்துள்ளதாகத் தெரிவித்தனர்.

இந்தப் பிரச்சினை தொடர்பாக மின் வாரிய தலைமைச் செயலகப் பிரிவு செயலர் சின்னராஜூலு பிறப்பித்துள்ள உத்தரவு வருமாறு:

ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு ஊதிய ஒப்பந்தம், பதவி உயர்வு, நியமனம் போன்றவற்றை கணக்கிட்டு, ஓய்வூதியம் நிர்ணயம் செய்ததில் பல்வேறு தவறுகள் நடந்து, அளவுக்கதிகமாக ஓய்வூ தியம் அளித்துள்ளது தெரிய வந்துள்ளது.

இத்தவறுகள் கணக்குத் தணிக்கையின் போது சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக இந்த ஓய்வூதியக் கணக்கீடுக் குளறுபடி ஏற்பட்டுள்ளது.

அதிக தொகையை திரும்பப் பெற முயற்சித்ததில், பலர் நீதிமன்றத்துக்குச் சென்று வழக்குத் தாக்கல் செய்துவிட்டனர். ஏற்ெகனவே மின் வாரியம் கணக் கிலடங்காத வழக்குகளை சந்தித்து வரும் நிலையில், இதுவும் கூடுதல் சுமையாகியுள்ளது.

எனவே, வரும் காலங்களில் கூடுதல் வழக்குகளை தவிர்க்கவும், தவறான ஓய்வூதியக் கணக்கீடு பிரச்சினை எழாமல் தடுக்கவும், ஊழியர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.

ஐந்தாண்டுகளுக்குள் பணத் தைத் திரும்பிப் பெற நோட்டீஸ் அனுப்பப்படும். தவறாக வழங் கப்பட்ட தொகையை உரிய ஊழியரிடம் திரும்பப்பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

இனி தணிக்கைத்துறை அதி காரிகள் அவ்வப்போது உரிய ஆய்வுகள் நடத்துவர். தவறுகள் நடந்தால், இனி ஊழியர்களிடம் அதற்கான தொகை பிடித்தம் செய்யப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x