Published : 04 Feb 2014 12:00 AM
Last Updated : 04 Feb 2014 12:00 AM
“உளுந்தூர்பேட்டை ஊழல் எதிர்ப்பு மாநாட்டில் தொண்டர்களின் எண்ணத்தைக் கேட்டு தேர்தல் கூட்டணி பற்றி அறிவிப்பேன்’’ என்று சொன்ன விஜயகாந்த் அவரது தொண்டர்களையும் அவரை எதிர்பார்த்துக் காத்திருந்த அரசியல் கட்சிகளையும் மீண்டும் குழப்பத்தில் ஆழ்த்திவிட்டதாக விமர்சனம் எழுந்துள்ளது.
“இப்படிப் பேசுவதும் நடப்பதும் விஜயகாந்துக்கு புதிதல்ல. சட்ட மன்ற தேர்தலுக்கு முன்பாக சேலத்தில் நடந்த மாநாட்டிலும் இப்படித்தான் தேர்தல் கூட்டணி முடிவை அறிவிப்பதாகச் சொல்லி கூட்டம் கூட்டிவிட்டு கடைசியில், ’மக்களோடு கூட்டணி’ என்று பேசினார்.
இப்போதும் அதுதான் நடந்திருக்கிறது. மாநாட்டில், ‘கூட் டணி வேண்டாம்’ என்று தொண்டர் கள் கை அசைக்க.. ’’கூட்டணி வேண்டாம் என்று தொண்டர்கள் சொன்னாலும் அதையும் மீறி தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவார்கள்’’ என்று விளக்க மளித்திருப்பதன் மூலம், யாரு டனோ கூட்டணி வைக்கப்போ வதை சூசகமாகச் சொல்லி இருக்கிறார் விஜயகாந்த். அதை ஏன் இப்படி எல்லாம் சுற்றிவளைத்துக் குழப்ப வேண்டும் என்கிறது தேமுதிக கூட்டணிக்காக காத்திருக்கும் அரசியல் வட்டாராம்.
இதுகுறித்து ’தி இந்து’விடம் பேசிய தென் மாவட்ட தேமுதிக மாவட்டப் பொறுப்பாளர் ஒருவர், “கூட்டணி முடிவை அறிவிப்பார் என்ற ஆவலோடுதான் நாங்களும் மாநாட்டில் திரளாக கலந்துகொண்டோம். தேர்தல் நேரம் என்பதால் ஆட்களை திரட்டி வந்து பலம் காட்ட அத்தனை மாவட்டச் செயலாளர்களுமே மெனக்கிட்டார்கள். ஆனாலும் கூட்டணி குறித்த சஸ்பென்ஸை கேப்டன் உடைக்கவில்லை.
இதன் பின்னணியிலும் ஒரு சூட்சுமம் இருக்கிறது. தொடக் கத்தில் பாஜக தரப்பிலிருந்து தேமுதிக-வுடன் தூதர்கள் மூலமாக கூட்டணி குறித்துப் பேசினர். அடுத்ததாக திமுக தரப்பிலும் கூட்டணி குறித்து பேசப்பட்டது. பலதரப்பட்ட நபர்கள் பேச்சுவார்த்தைக்கு வந்தபோதும் தேமுதிக-வுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கும் விதமாக பேச்சுவார்த்தைகள் இல்லை.
தேமுதிக துளியும் செல்வாக்கு குறையாமல் வளர்ந்து கொண்டிருக்கிறது; தொண்டன் துடிப்புடன் இருக்கிறான் என்பதை மாநாடு போட்டுக் காட்டி இருக்கிறார் கேப்டன். கூட்டணிக்காக கேப்டனை தேடி வருபவர்களால் இனி தேமுதிக-வை குறைத்துப் பேசி மதிப்பிட முடியுமா? அதுதான் கேப்டன் ஸ்டைல்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT