Last Updated : 05 Apr, 2014 12:58 PM

 

Published : 05 Apr 2014 12:58 PM
Last Updated : 05 Apr 2014 12:58 PM

அடிமைக் கூட்டணியிலிருந்து விடுதலையான காங்கிரஸ்: மத்திய இணையமைச்சர் இ.எம்.சுதர்சன நாச்சியப்பன் பேட்டி

கூட்டணிக் கதவுகள் சாத்தப்பட்டுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் தனித்து விடப்பட்டுள்ளது என்ற வாதத்தை நிராகரித்த மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சர் இ.எம். சதர்சன நாச்சியப்பன், உண்மையிலேயே கூட்டணி என்ற அடிமைத்தளையில் இருந்து விடு விக்கப்பட்டுள்ளது என்று கூறினார். அக்கட்சியின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரான ஆ. கோபண்ணா தயாரித்துள்ள “வெல்லட்டும் காங்கிரஸ்” என்ற தேர்தல் பிரச்சாரக் கையேட்டை வெளியிடுவதற்காக சென்னை வந்த நாச்சியப்பன் ‘தி இந்து’வுக்கு அளித்த நேர்காணல்:

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தனித்து விடப்பட்டுள்ளது. இது குறித்து உங்கள் கருத்து என்ன?

உண்மை வேறு விதமாக இருக் கிறது. நாற்பத்தி மூன்று ஆண்டு களாக கூட்டணி என்ற அடிமைத் தளையில் சிக்கிக் கிடந்த காங்கிரஸ் அதை விட்டு விடுதலையாகி நிற் கிறது. ஆண்டாண்டு காலமாக கூட்டணியில் மாட்டிக் கொண்டு, தன்னுடைய சொந்தக் கருத்தையும், காங்கிரஸ் கட்சியின் திட்டங்களை யும் வெளிப்படையாகத் தெரி விக்க முடியாமல் தவித்த காங்கிரஸ் தொண்டன் மகிழ்ச்சி யுடன் இருக்கிறான்.

காங்கிரஸ் தனது தவறுகளுக்கு வருந்தி, திருத்திக் கொண்டால் தேர் தலுக்குப் பிறகு ஆதரவு அளிக்கத் தயாராக இருப்பதாக கருணாநிதி கூறியிருக்கிறாரே?

கருணாநிதி திட்டமிட்டே இக் கருத்தைத் தெரிவித்திருக்கிறார். திமுக கூட்டணிக்கு ஆதரவாக இருக்கும் வாக்குகள், குறிப்பாக சிறுபான்மையினர் மற்றும் தலித்து களின் வாக்குகள் காங்கிரஸ் கட்சிக்கு மாறி விடுமோ என்று அவர் ஐயப்படுவதாகத் தெரிகிறது. எல்லாக் கட்சிகளும் ஏதோ ஒரு கட்டத்தில் பாஜகவுக்கு ஆதரவாகத் தான் இருந்திருக்கின்றன. ஆகவே திமுகவும் எதிர்காலத்தில் மோடியை ஆதரிக்கலாம் என்று சிறுபான்மையினரும் தலித்துகளும் சந்தேகம் கொள்கின்றனர்.

இன்னொரு கருத்து என்னவென் றால், காங்கிரஸுக்கு ஆதரவாக விழும் வாக்குகளை திமுகவுக்குத் திருப்புவதற்காகத்தான் காங்கிரஸ் ஆதரவு என்ற கருத்தை அவர் தெரிவித்திருக்கிறார். இது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

இது சரியான கருத்து அல்ல. தற்போதுள்ள சூழலில் காங்கிரஸ் கட்சியினர் நிச்சயமாக திமுகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள். ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் திமுக செய்த தவறுகளுக்காக காங்கிர ஸும் கெட்டப் பெயரை சம்பாதிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டி ருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் காங்கிரஸ் கட்சியின் பலத்தை முதலமைச்சர் ஜெயலலிதாவும் நன்றாக உணர்ந்திருக்கிறார். அதனால்தான் தன்னுடைய பிரச்சாரத்தில் காங்கிரஸ் கட் சியின் தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசைக் குறிவைத்துத் தாக்குகிறார். பலவீனமாக இருக்கும் கட்சியைத் தாக்க வேண்டிய அவசியம் இன்னொரு கட்சித் தலைவருக்கு ஏன் வரப் போகிறது. காங்கிரஸை கூட்டணியில் சேர்க்காமல் விட்ட தன் மூலம் திமுகவும் இத்தேர்தலில் தற்கொலை செய்து கொண்டி ருக்கிறது.

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரிக்காமல் விலகியதை மத்திய அமைச்சர்களான ப. சிதம்பரமும் ஜி.கே. வாசனும் கண்டித்திருக்கிறார்கள். ஆனால் இந்தியாவின் நிலைபாட்டை நீங்கள் ஆதரித்திருக்கிறீர்கள். இது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தாதா?

என்னைப் பொறுத்தவரை இலங்கையில் வசிக்கும் 41 லட்சம் தமிழர்களுக்காகவும், இந்தியாவில் அகதிகளாக இருக்கும் அவர்களின் உறவினர்களுக்காகவும் பேசியிருக் கிறேன். மற்றவர்கள் வெளிநாடுக ளில் வசதியாக வாழ்ந்து கொண்டு, தாங்கள் வசிக்கும் நாடுகளில் கிடைக்கும் சலுகைகளை அனுப விக்கும் தமிழர்களுக்காகப் பேசுகிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x