Published : 12 Feb 2015 09:34 AM
Last Updated : 12 Feb 2015 09:34 AM
‘நாம் ஒன்றும் பிரிட்டிஷ்காரர் களுடன் சண்டை போடவில்லை. எனவே, இன்னொருவர் தோற்றால் எனக்கு சந்தோஷம் என்று சொல் வது நாகரிக அரசியல் இல்லை’ என்றார் நாடாளும் மக்கள் கட்சித் தலைவர் நடிகர் கார்த்திக்.
நேற்று ‘தி இந்து’வுக்கு அவர் அளித்த பேட்டி:
டெல்லியில் அரசியலில் இப்படி யொரு அதிரடி மாற்றம் ஏற்பட என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?
இப்படித் தலைகீழாக மாற்றம் வரும் என்று கேஜ்ரிவாலே எதிர் பார்க்கவில்லை. ஆனால், மக்கள் மாற்றத்தை விரும்பினார்கள். தனது எளிமையால் மக்களோடு மக்க ளாக இணைந்துவிட்டார் கேஜ்ரி வால். 49 நாளில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தது தவறு என மக்களிடம் மன்னிப்புக் கேட்டார். இந்த மனபக்குவம் அனைத்து அரசியல்வாதிகளுக்கும் வர வேண்டும். நம்மோடு இருப்பவருக்கு வாக்களித்தால் நமக்கு நல்லது நடக்கும் என்று மக்கள் நினைத்தார்கள்; கேஜ்ரி வாலுக்கு அபார வெற்றியைக் கொடுத்தார்கள். ஆனால் ஒன்று, டெல்லிக்கு தனி மாநில அந்தஸ்து கிடைக்காதவரை கேஜ்ரிவால் எதையுமே சாதிக்க முடியாது.
காங்கிரஸ் வேட்பாளர்களில் 63 பேர் காப்புத் தொகையை இழந்திருக்கி றார்களே?
வெற்றி - தோல்வி என்பது அரசி யலில் சகஜம். 2 எம்.பிக்களை வைத்திருந்த பாஜகவுக்கு இப்போது 280 எம்.பிக்கள் கிடைக்க வில்லையா? மக்களுக்கு நல்லது செய்ததால்தான் தொடர்ந்து மூன்று முறை காங்கிரஸ் டெல் லியை ஆண் டிருக்கிறது. லோக் சபா தேர்தலில் இருந்த ஊழல் பிரச் சாரம் இன்னும் அப்படியே இருப் பதால்தான் இப்போது காங்கி ரஸுக்கு இந்த நிலைமை. எனினும், காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரும்.
காங்கிரஸ் தோற்றதைப் பற்றிக் கவலைப்படாமல், டெல்லியில் பாஜக தோற்றது மகிழ்ச்சியளிக்கிறது என்கிறாரே உங்கள் நண்பர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்?
எதிர்க் கட்சிகளை எதிரிக் கட்சிக ளாகப் பார்க்கக் கூடாது. நாம் ஒன்றும் பிரிட்டீஷ்காரர்களுடன் சண்டை போடவில்லை. எனவே, இன்னொருவர் தோற்றால் எனக்கு சந்தோஷம் என்று சொல்வது நாகரிக அரசியல் இல்லை. யார் ஜெயித்தாலும் ஜனங்களுக்கு நல்லது செய்யுங்க. அனைவரும் ஒற்றுமையாக இருந்தால்தான் பொருளாதார வளர்ச்சியைக் கொண்டுவர முடியும். இல்லா விட்டால் பாகிஸ் தான் மாதிரித்தான் திண்டாடணும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT