Last Updated : 23 Feb, 2015 11:26 AM

 

Published : 23 Feb 2015 11:26 AM
Last Updated : 23 Feb 2015 11:26 AM

சர்வதேச கற்பித்தல் போட்டியில் பங்கேற்க செஞ்சி அரசுப் பள்ளி ஆசிரியர் தேர்வு

விழுப்புரம் மாவட்ட அரசு பள்ளி ஆசிரியர் திலீப், சர்வதேச ஆசிரியர்களுக்கான கற்பித்தல் போட்டியில் இந்திய பிரதிநிதியாக கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

மாணவர்களிடையே புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் பயிலும் திறனை அதிகரிக்கும் விதமாகவும், ஆசிரியர்கள் செயல்பட வேண்டிய வழிமுறைகளை வலியுறுத்தும் நோக்குடனும் (Microsoft Innovation Educator Leadership) இந்தியாவில் உள்ள பள்ளி, கல்லூரி ஆசிரியர் களுக்கான போட்டியை மைக்ரோ சாஃப்ட் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக நடத்தி வருகிறது.

இந்த ஆண்டுக்கான போட்டி யில் பங்கேற்க இந்தியா முழுவதும் உள்ள 762 பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் ஆன் லைன் மூலம் விண்ணப்பித்திருந்தனர். அவர்கள் அளித்த வீடியோ காட்சிகள், கல்விமுறைகள் தொடர்பான அறிக்கை அடிப்படையில் இந் நிறுவனம் இந்தியாவிலிருந்து 15 ஆசிரியர்களை தேர்வு செய்து அதில் சிறந்தவரை தேர்ந்தெடுக்க டெல்லியில் கடந்த 20-ம் தேதி போட்டி ஒன்றை நடத்தியது.

இதில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள சத்தியமங்கலம் அரசு மேநிலைப்பள்ளியின் ஆங்கில ஆசிரியரான திலீப் முதலிடத்தை யும், காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றிய பள்ளியின் அறிவியல் ஆசிரியர் அன்பழகன் இரண்டாம் இடத் தையும், டெல்லி பப்ளிக் ஸ்கூல் ஆசிரியை சாந்தினி மூன் றாவது இடத்தையும் பிடித்தனர்.

இதையடுத்து அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் நகரில் ஏப்ரல் 28-ம் தேதி நடைபெறும் சர்வதேச கற்பித்தல் போட்டியில் ஆசிரியர் திலீப் கலந்துகொள்ள தகுதி பெற்றுள்ளதாக மைக்ரோ சாஃப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ஆசிரியர் திலீப்பை தொடர்பு கொண்டு கேட்டபோது, சர்வதேச கற்பித்தல் போட்டியில் பங்கேற்க நான் தேர்வு செய்யப்பட்டிருப்பது அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கிடைத்த கவுரவமாகும். மாணவர்களுக்கு அரசு வழங்கிய லேப்டாப் மூலம் பாடம் நடத்தி வருகிறோம்.

தமிழகம் முழுவதும் உள்ள 250 பள்ளிகள் ஒரு குழுவாக இணைந்து தங்களின் புதுமையான கண்டுபிடிப்புகளை >www.palli.in என்ற இணையதள முகவரி மூலமும் பகிர்ந்து கொள்கிறார்கள். மேலும் என்னுடைய >dhilipteacher.blogspot.in என்ற முகவரியில் 90 நாடுகளில் உள்ள ஆசிரியர்கள் இணைந்துள்ளனர் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x