Published : 14 Apr 2014 10:31 AM
Last Updated : 14 Apr 2014 10:31 AM

குருத்தோலை ஞாயிறு அனுசரிப்பு தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி

குருத்தோலை ஞாயிறு தினத்தையொட்டி சென்னை மற்றும் புற நகர் பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நடத்தப் பட்டது. ஏராளமான கிறிஸ்தவர்கள் கைகளில் குருத்தோலை ஏந்தி பவனி வந்தனர்.

இயேசு கிறிஸ்து உயிர்த் தெழுந்த நாளை ஆண்டுதோறும் ஈஸ்டர் பண்டிகையாக கிறிஸ் தவர்கள் கொண்டாடி வருகின்ற னர். இந்த ஆண்டு ஈஸ்டர் பண்டிகை, வரும் ஞாயிற்றுக் கிழமை கொண்டாடப்படுகிறது. ஈஸ்டருக்கு முந்தைய ஞாயிற்றுக் கிழமையை குருத்தோலை ஞாயி றாக (பாஃம் சண்டே) கடைபிடிக் கின்றனர்.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு இறப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு ஜெருசலேம் நகருக்குள் மிகுந்த மரியாதையோடு சென்ற காட்சியை நினைவுகூரும் வகையில் குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்படுகிறது.

அதன்படி, சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு தினம் நேற்று கடை பிடிக்கப்பட்டது. தேவாலய வளாகத்திலும் அதை ஒட்டியுள்ள வீதியிலும் ஏராளமான கிறிஸ்தவர் கள் கைகளில் குருத்தோலைகளை ஏந்தியபடி, ‘ஓசானா தாவீதின் புதல்வா...’ என்ற பாடலை பாடிய படி பவனியாக சென்றனர். சென்னையில் சாந்தோம் பேராலயம், பெசன்ட் நகர் வேளாங் கண்ணி ஆலயம், மயிலாப்பூர் பிரகாச மாதா ஆலயம் உள்பட அனைத்து தேவாலயங்களிலும் காலையில் சிறப்புத் திருப்பலி மற்றும் ஆராதனை நடத்தப்பட்டது. அதற்கு முன்பாக குருத்தோலை பவனி நடந்தது.

புறநகர் பகுதிகளில் கிழக்கு தாம்பரம் பாத்திமா அன்னை ஆலயம், பெருங்களத்தூர் குழந்தை இயேசு ஆலயம், ஊரப் பாக்கம் ஆரோக்கிய அன்னை ஆலயம், கூடுவாஞ்சேரி நல்லா யன் ஆலயம் உள்ளிட்ட தேவால யங்களில் குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்பட்டது. மறைமலை நகர் தூய விண்ணரசி அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை சி.பால்ராஜ் தலைமையில் நடந்த குருத்தோலை பவனி, தூயவள னார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தொடங்கி விண்ண ரசி அன்னை ஆலயத்தில் முடிவடைந்தது. பின்னர் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x