Published : 07 Apr 2014 12:42 PM
Last Updated : 07 Apr 2014 12:42 PM
ராணுவத்தில் சேர்வதற்கான பொது நுழைவுத் தேர்வுக்குரிய (CEE) நுழைவுச் சீட்டு வழங்கும் தேதி, மக்களவைத் தேர்தல் காரணமாக மாற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
பொது நுழைவுத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு ஏப்ரல் 24-ம் தேதி வழங்கப்பட இருந்தது. ஆனால் அது வரும் 26-ம் தேதி தான் வழங்கப்படும். பிப்ரவரி 10-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை திருவண்ணாமலையில் ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் கலந்து கொண்டு, நேரடி மற்றும் பரிசீலனை (direct and review) பிரிவில் மருத்துவ ரீதியாக தேர்வானவர்கள் மேற்கண்ட தகவலை கவனத்தில் கொள்ளவும்.
தகுதியுள்ள தேர்வர்கள் அனைவரும் 26-ம் தேதி காலை 6.30 மணிக்கு தலைமைச் செயலகத்துக்கு பின்புறத்தில் உள்ள ராணுவ அணிவகுப்பு மைதானத்தில் ஆள்சேர்ப்பு அலுவலரை சந்திக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது பற்றி தேர்வு எழுதுபவர்களுக்கு தனியாக தகவல் அனுப்பப்பட மாட்டாது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT