Published : 17 Apr 2014 10:54 AM
Last Updated : 17 Apr 2014 10:54 AM
அதிமுக-வின் நட்சத்திரப் பேச்சாளர் நடிகை குயிலி. கருணாநிதியைக் கூட, ‘கலைஞர் கருணாநிதி’ என்று நாகரிகமாபக் பேசித்தான் வாக்குக் கேட்கிறார் ‘தி இந்து-வுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டி:
அரிசி, பருப்பு, மிளகாய் என விலைவாசி எல்லாம் எகிறிப்போச்சுன்னு சொல்றாங் களே... ஒரு பெண்மணியா இதுக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க?
கலைஞர் கருணாநிதி தனக்கு ஓட்டு வேணும்கிறதுக்காக பொய்யான தகவலை தரக்கூடாது. பெட்ரோல், டீசல் விலை ஏறுனதுக்கு யார் பொறுப்பு? இதனாலதானே மத்த எல்லா பொருளோட விலையும் ஏறுது. ஆனாலும், ஏழை மக்கள் கஷ்டப்படக் கூடாதுன்னு அத்தியா வசியப் பொருட்களை ரேஷன்ல அம்மா கொடுக்குறாங்க. இப்ப முக்கியப் பிரச் சினையே மின்சாரமும் தண்ணீரும்தான். இது ரெண்டும் தட்டுப்பாடா இருக்க காரணம் திமுக-வும் மத்தியில் இருக்கிற காங்கிரஸ் அரசும்தான்.
’20 தொகுதிகளில் ஜெயிப்போம்’ என்று காங்கிரஸும் ’நாங்கள் கைகாட்டுபவர் தான் பிரதமராக வர முடியும்’என்று திமுக-வும் சொல்றாங்களே?
அது அவங்களோட நம்பிக்கை. அவங்க சொல்றத நம்பி மக்கள் ஓட்டுப் போடணும்ல? உலகப் பணக்காரர்கள் வரிசையில கருணாநிதி குடும்பமும் ஒண்ணு. 66 வயது அம்மாவுக்கு தமிழக மக்கள்தான் சொந்தம். அவங்களுக்கு சொத்து சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. இதைச் சொன்னா, திமுக-காரங்க கிண்டலடிக்கிறாங்க. ஆனா, ஒண்ணுங்க… அம்மா பிரதமரா வரணும்னு மக்கள் ரொம்ப ஆர்வமா இருக்காங்க.
ஆளும் கட்சியை எதிர்த்து நிறைய இடங்களில் மக்கள் கேள்வி கேட்க ஆரம்பிச்சிருக்காங்களே?
நான் சென்ற இடங்களில் இதுவரை என்னிடம் யாரும் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. மின்சார பற்றாக்குறை பற்றி சில இடங்களில் கேட்டார்கள். அதுக்கு யார் காரணம்? சரிசெய்ய என்ன வேலைகள் நடந்துக்கிட்டு இருக்குன்னு நான் அவங்களுக்கு தெளிவா எடுத்துச் சொல்லி புரியவைத்தேன். ஏற்கெனவே பேசிய இடங்களில் மீண்டும் வந்து பேசச் சொல்லி மக்கள் கூப்பிடுறாங் கன்னா நாங்க சொல்றது உண்மைன்னு அவங்க புரிஞ்சிருக்காங்கன்னுதானே அர்த்தம்?
திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களை அதிமுக ஆட்சியில் முடக்கி வைச்சிட்டதா குறை சொல்றாங்களே?
எந்தத் திட்டத்தையும் முடக்கி வைக் கலை. திமுக ஆட்சியில எல்லாத்தையும் பொட்டலாக்கி வைச்சிட்டு போயிட்டாங்க. எல்லாத்தையும் அரைகுறையா விட்டுட் டுப் போனது அவங்கதான். அத்தனையை யும் ஒவ்வொன்றா சரி பண்றதுக்குள்ள தேர்தல் வந்திருச்சு. அதுக்குள்ள அவசரப் பட்டா எப்படி? அம்மா ஆட்சியில எல்லாமே முறையா நடக்கும்.
அதிமுக-வுக்கும் பாஜக-வுக்கும் மறைமுக உறவு இருப்பதாக திமுக குற்றம் சாட்டுகிறதே?
அப்படின்னா காங்கிரஸுக்கும் திமுக-வுக்கும் டீல் இருக்குன்னு சொல்லலாமா? ஆனா, அம்மா ரொம்பத் தெளிவா இருக் காங்க. யாரும் அவங்கள திசை திருப்ப முடியாது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT