Published : 28 Apr 2014 07:51 AM
Last Updated : 28 Apr 2014 07:51 AM
நடிகர் ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா இயக்கியுள்ள ‘கோச்சடையான்’ திரைப்படம் வரும் மே 9-ம் தேதி வெளியாகிறது. இதையொட்டி சென்னையில் செய்தியாளர்களிடம் லதா ரஜினிகாந்த் கூறியதாவது:
ரஜினிகாந்த் முழுக்க ஆன்மிகத்தைக் கடைபிடிப்பதிலேயே கவனம் செலுத்துகிறார். தன்னை ஆன்மிகமே வழிநடத்துவதாக நம்புகிறார். கடவுளின் கட்டளையையே முழுக்க நம்புகிறார். அவரது அடுத்த 10 ஆண்டுகால பயணமும் ஆன்மிக வழியிலேயே அமையும். இதுதான் அவரது விருப்பம். வேறு விஷயங்களில் அவருக்கு நாட்டம் இல்லை. அவரது விருப்பம்தான் எங்களுடைய விருப்பமும்.
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டிருந்தபோது நரேந்திர மோடி அக்கறையோடு வந்து நலம் விசாரித்தார். சமீபத்தில் எங்கள் வீட்டுக்கே வந்து சந்தித்தார். மோடி எங்கள் குடும்பத்தின் மீது மிகுந்த அன்பு கொண்டவர். எங்கள் குடும்பத்தில் ஒருவராகத்தான் அவரைக் கருதுகிறோம். அந்த சந்திப்பு மிகவும் நெகிழ்ச்சியானதாக இருந்தது.
இவ்வாறு லதா கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT