Published : 11 Apr 2014 12:22 PM
Last Updated : 11 Apr 2014 12:22 PM

செங்கல் சூளையில் கொத்தடிமைகள் மீட்பு

அரக்கோணம் அருகே செங்கல் சூளையில் கொத்தடிமையாக இருந்த 5 குடும்பங்களைச் சேர்ந்த 16 பேர் மீட்கப்பட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த கார்த்திகாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வரதன். இவருக்கு சொந்தமான விவசாய நிலம் அரக்கோணம் அடுத்த உளியம்பாக்கம் கிராமத்தில் உள்ளது. இந்த நிலத்தில் செங்கல் சூளை அமைத்து வியா பாரம் செய்துவருகிறார். செங்கல் சூளையில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் கொத்தடிமை களாக இருப்பதாக தனியார் தொண்டு நிறுவனத்துக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், தொண்டு நிறுவன நிர்வாகிகள் வியாழக்கிழமை அங்கு சென்று, ஒரு குழந்தை உட்பட 16 பேரை மீட்டு, ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் பிரிய தர்ஷினியிடம் ஒப்படைத்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், திருத்தணி அருகே பெரியகரும்பூர் இருளர் காலனியைச் சேர்ந்த முத்து (26), சாரதா (24), ராகவன் (8 மாத குழந்தை), துரைசாமி (55), குட்டியம்மா (37), கோதண்டன் (23), மாரி (15), நாகவள்ளி (14), சுகுணா (12), சின்னராஜ் (58), தயா (55), கோவிந்தம்மாள் (45), மணி (21), கன்னியம்மாள் (12) மற்றும் திருத்தணி அடுத்த கனகம்மாசத்திரம் வாட்டர் பாளையம் பகுதியைச் சேர்ந்த சரவணன் (34), சித்ரா (30) என தெரியவந்தது.

5 குடும்பங்களைச் சேர்ந்த இவர்கள், வரதனின் செங்கல் சூளையில் கடந்த 3 ஆண்டுகளாக கொத்தடிமைகளாக இருந்துள்ள னர். இவர்கள் வாங்கிய 5 ஆயி ரம் பணத்துக்குக்கான வட்டிக்கு சரியாகி விட்டதாக கூறி, கூலியை தர மறுத்துவிட்டதாக தெரிவித்த னர். மீட்கப்பட்ட கொத்தடிமை களை அவர்களது சொந்த கிராமத் தில் குடியமர்த்தவும் அவர்க ளுக்கு வழங்க வேண்டிய அரசின் நிவார ணங்கள் வழங்கவும் வருவாய் துறையினருக்கு கோட்டாட்சி யர் பிரியதர்ஷினி உத்தரவிட்டார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x