Published : 07 Feb 2015 10:56 AM
Last Updated : 07 Feb 2015 10:56 AM

மாநகரப் பேருந்து விபத்துகளுக்கு ஓட்டுநர்களே முக்கிய காரணம்: ஐஐடி ஆய்வில் தகவல்

மாநகரப் பேருந்து ஓட்டுநர்கள் ஓய்வு இல்லாமல் தொடர்ச்சியாக பல மணி நேரம் வேலை பார்ப்பதும், அனுபவம் இல்லாதவர்கள் ஓட்டுந ராக நியமிக்கப்படுவதுமே பெரும் பாலான விபத்துகளுக்கு காரணம் என்று சென்னை ஐஐடி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

சென்னை மாநகரப் போக்கு வரத்துக் கழகம் மூலம் 3,497 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் தினமும் 56 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். மாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்து களால் ஏற்படும் விபத்துகள், அதற்கான காரணம் குறித்து சென்னை ஐஐடி பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் ஆய்வில் ஈடுபட்டனர். சுமார் 6 மாத காலம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதுதொடர்பாக கேட்டபோது, சென்னை ஐஐடி பேராசிரியர் கீதகிருஷ்ணன் கூறியதாவது:

இந்தியாவில் ஆண்டுதோறும் 4 லட்சத்து 97 ஆயிரம் சாலை விபத்துகள் நடக்கின்றன. சராசரி யாக ஒரு நிமிடத்துக்கு ஒரு விபத்து நடக்கிறது. 3.7 நிமிடத்துக்கு ஒருவர் சாலை விபத்தில் இறக்கிறார். 75 சதவீத சாலை விபத்துகளுக்கு ஓட்டுநரின் கவனக்குறைவே காரணமாக உள்ளது.

ஒரு நாளுக்கு சராசரியாக ஒரு பேருந்தில் எத்தனை பேர் பயணம் செய்கின்றனர் என்று கணக்கிடப் பட்டது. பெங்களூருவில் 719 பேர், டெல்லியில் 726 பேர், மும்பையில் 1,331 பேர் செல்கின்றனர். மற்ற மாநகரங்களைவிட சென்னை பேருந்துகள் அதிக கூட்ட நெரிசலு டன் செல்கின்றன. சென்னையில் ஒரு நாளுக்கு சராசரியாக ஒரு பேருந்தில் 1601 பேர் பயணம் செய்கின்றனர்.

சென்னையில் மாநகரப் பேருந்து களால் ஏற்படும் விபத்துகள், அதற்கான காரணங்கள் குறித்து ஆய்வு நடத்தினோம். 25 வயது முதல் 55 வயதுக்கு உட்பட்ட 142 ஓட்டுநர்களிடம் ஆய்வு நடத்தப் பட்டது. அவர்களில் 52 ஓட்டுநர்கள் விபத்தை ஏற்படுத்தியவர்கள்.

ஓய்வு இல்லாமல் ஓட்டுநர்கள் தொடர்ந்து 16 மணி நேரம் பணி யாற்றுவது, போதிய அனுபவம் இல்லாதவர்களை ஓட்டுநர்களாக நியமிப்பது போன்ற காரணங்களால் தான் அதிக விபத்துகள் ஏற்படுகி ன்றன என்பதையும் கண்டறிந் துள்ளோம்.

மருத்துவ சிகிச்சை அவசியம்

மூட்டு வலி, மன அழுத்தத்தால் பெரும்பாலான ஓட்டுநர்கள் அவதிப்படுகின்றனர். முதுகு வலி, பார்வைக் குறைபாடு, தொடை வலி போன்ற பாதிப்புகளும் ஓட்டுநர்களிடம் பரவலாக இருக்கின்றன. பாதிக்கப்பட்டுள்ள ஓட்டுநர்களுக்கு உடனுக்குடன் மருத்துவ சிகிச்சை வழங்கப்பட வேண்டும். இல்லாவிட்டால், அவர்களை மாற்றுப் பணி யில் அமர்த்தவேண்டும். முன்அனு பவம் இல்லாத ஓட்டுநர்களுக்கு முறைப்படி பயிற்சி வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x