Published : 12 Feb 2015 09:52 AM
Last Updated : 12 Feb 2015 09:52 AM
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலைப் புறக்கணித்த முக்கிய அரசியல் கட்சிகளின் வாக்குகள் யாருக்கு என்ற கிடைக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு தேர்தல் களத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளின் மத்தியிலும் எழுந்துள்ளது.
ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப் பதிவு நாளை(பிப்.13) நடைபெற வுள்ளது. இந்தத் தேர்தலில் அதிமுக, திமுக, பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 29 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். கடந்த 10 தினங்களாக தேர்தல் களத்தில் உள்ள அரசியல் கட்சியினர் பர பரப்பாக பிரச்சாரப் பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.
இந்தத் தேர்தலை விடுதலைச் சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, காங்கிரஸ் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி கள் போட்டியிடாமல் புறக்கணித்த நிலையில், எந்த கட்சிக்கும் ஆதர வும் இல்லை என அக்கட்சிகளின் தலைவர்கள் ஏற்கெனவே அறி வித்துவிட்டனர். இந்த நிலையில், இந்தத் தேர்தலைப் புறக்கணித்த கட்சிகளின் வாக்குகள் எந்த வேட்பாளருக்கு கிடைக்கப் போகிறது என்பது எதிர்பார்ப்பு அரசியல் கட்சிகளிடையேயும், மக்களிடையேயும் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் திருச்சி மாநகர் மாவட் டத் தலைவர் ஜெரோம் ஆரோக்கிய ராஜ் கூறியபோது, “இந்த இடைத் தேர்தலில் யாருக்கும் ஆதர வில்லை என்பதை கட்சி மேலிடம் தெளிவாக தெரிவித்துவிட்டது. இதன் காரணமாக எந்தக் கட் சிக்கு ஆதரவாகவும் தேர்தல் பணி யாற்றவில்லை வேறு உத்தர வாதத்தையும் யாருக்கும் நாங்கள் அளிக்கவில்லை. தொண்டர்கள் அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப வாக்களிக்கலாம்” என்றார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருச்சி புறநகர் மாவட்டச் செயலர் தமிழாதன் கூறியபோது, “யாருக்கும் ஆதரவும் இல்லை, எந்தக் கட்சியினருடனும் இணைந்து தேர்தல் பணியாற்றக் கூடாது என கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துவிட்டார். இன்று ஆளும் கட்சியின் அராஜகம், அரசு நிர்வாகம், காவல் துறை ஆகி யவை அதிமுகவுக்கு சாதகமாக செயல்படுகிறது என திமுக, பாஜக, மார்க்சிஸ்ட் ஆகிய கட்சிகள் புகார் கடிதங்களை அனுப்பி வரு கின்றன. இதை ஒரு மாதத்துக்கு முன்பே திருமாவளவன் தெரிவித்து விட்டார்.
இடைத்தேர்தல் என்பது எந்த கட்சி ஆளும் கட்சியாக இருக்கிறதோ அவர்களுக்கு சாதகமாகவே நடத்தப்படுகிறது. இந்தப் போக்கு மாற்றப்பட வேண்டும் என்பதும் அவரது கருத்து. எனவே, இந்தத் தேர்தலில் ஒவ்வொரு தொண் டரும் சுதந்திரமாக வாக்களிக்கட்டும் என்பதுதான் தலைவரின் விருப்பம். எங்களை அணுகும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் இதைத்தான் நாங்கள் கூறி வரு கிறோம்” என்றார்.
பாமக திருச்சி மாவட்டச் செயலர் எஸ்.கதிர்ராஜா கூறியபோது, “யாருக்கும் ஆதரவும் இல்லை, போட்டியும் இல்லை. ஆனால், ஜனநாயகக் கடமையை ஒவ் வொருவரும் ஆற்ற வேண்டும் என்பது முக்கியமானது என்பதால் இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் தரத்தைப் பார்த்து தொண்டர்கள் வாக்களிக்கலாம் என பாமக நிறுவனர் ஏற்கெனவே தெரிவித்துவிட்டார்” என்றார்.
ஒரு சில இடங்களில், தேர்த லைப் புறக்கணித்த கட்சிகளின் கிளைக் கழக நிர்வாகிகளை அதிமுக, திமுகவினர் அணுகி தங்க ளுக்குச் சாதகமாக செயல்படுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். ஆனால், இது எந்த அளவுக்கு அவர் களுக்கு பயன்தரும் என்பது தெரியவில்லை.
சுதந்திரமாக, அவரவர் விருப் பத்துக்கு ஏற்ப வாக்களிக்கலாம் என்று தேர்தலைப் புறக்கணித்த கட்சிகள் அறிவித்துள்ளது எந்த கட்சி வேட்பாளருக்கு சாதகமாக இருக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT