Published : 16 Feb 2015 11:38 AM
Last Updated : 16 Feb 2015 11:38 AM

மாணவர்களிடம் இலக்கியத் திறனை ஊக்குவிக்க வேண்டும்: ப.சிதம்பரம்

மாணவர்களிடம் இலக்கியத் திறனை ஊக்குவிக்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.

பழனியப்பா பிரதர்ஸ் மற்றும் பழனியப்பா குழுமத்தின் நிறுவனர் தின விழா சென்னையில் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். நிறுவனர் தின விழாவையொட்டி தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்காக இலக்கியப் போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில் வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் சிறந்த தமிழாசிரியர்களுக்கு சிதம்பரம் பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கி பேசியதாவது:

தமிழில் பதிப்புத் துறையில் வெற்றிகரமாக செயல்படுவது சவாலான விஷயம். சில மாதங்களுக்கு முன்பு எழுத்து அமைப்பை தொடங்கியபோது சில பதிப்பகத்தார்களிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது பதிப்பகங்கள் எவ்வளவு சிரமமான சூழலில் இயங்கி வருகின்றன என்பதை அறிய முடிந்தது. ஆனால், பல ஆண்டுகளுக்கு முன்பே பழனியப்பன் செட்டியார் வெற்றிகரமாக பதிப்பகத்தை நடத்தினார்.

எழுத்து வழக்கில் மட்டும்தான் தனித்தமிழ் உள்ளது. பேச்சு வழக்கில், தொலைக்காட்சியில், சினிமாவில் தனித்தமிழ் இல்லை. பாடல்களிலும் தனித்தமிழ் இல்லை. எழுதும் போதுதான் நாம் தனித்தமிழை பயன்படுத்துகிறோம். மாணவர்களின் எழுத்தை இலக் கியமாக மாற்ற வேண்டும். இதற்கு ஆசிரியர்கள் ஊக்குவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x