Published : 03 Apr 2014 09:20 AM
Last Updated : 03 Apr 2014 09:20 AM
முன்னாள் அமைச்சரும் திமுக பிரமுகருமான மருங்காபுரி பொன்னுச்சாமி மீண்டும் அதிமுக-வில் இணையப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
திருச்சி மாவட்டம் மருங்காபுரி தொகுதியைச் சேர்ந்த பேராசிரியர் பொன்னுச்சாமி கடந்த 1991-96 அதிமுக ஆட்சியில் துணை சபாநாய கராகவும் கல்வி அமைச்சராகவும் இருந்தவர்.
அடுத்து வந்த திமுக ஆட்சியில் பொன்னுச்சாமி மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்துச் சேர்த்த தாக ஊழல் வழக்குப் பதிவானது.
இந்த வழக்கில் குற்றம் நிரூபிக் கப்பட்டதால் பொன்னுச்சாமிக்கு சிறை தண்டனையும் விதிக்கப்பட் டது. உச்சநீதிமன்றம் வரைக்கும் சென்று போராடியும் கூட அவரால் தண்டனையிலிருந்து தப்பவே முடியவில்லை.
ஊழல் வழக்கில் சிறை தண் டனை விதிக்கப்பட்டதால் அதிமுக-வில் பொன்னுச்சாமி ஓரங்கட்டப்பட்டார். இதையடுத்து, அவரும் முன்னாள் அமைச்சர் குப.கிருஷ்ணனும் தேமுதிக-வில் இணைந்தனர்.
அந்தக் கட்சியில் பொன் னுச் சாமிக்கு மாநிலத் தேர்தல் பிரிவு செயலாளர் பதவி வழங்கப்பட்டது. ஆனாலும் அந்தக் கட்சியில் எந்தப் பிடிப்பும் ஆர்வமும் இல்லாம லேயே இருந்து வந்தார்.
இதற்கிடையில், 2007-ல் பொன் னுச்சாமி திமுக-வில் தன்னை இணைத்துக்கொண்டார். ஆனால், திமுக-விலும் உள்கட்சியில் நடமாடிய உரசல்களையும், சிக்கல் களையும் அவரால் தாக்குப் பிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில், இப்போது அவர் மீண்டும் அதிமுக-வில் இணைய தூது விட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
தேர்தல் பிரச்சாரத்துக்காக ஏப்ரல் 5-ம் தேதி ஜெயலலிதா திருச்சி வரவிருக்கிறார். அப்போது பொன்னுச்சாமி தனது ஆதரவாளர்களுடன் அதிமுக-வில் இணைவார் என்று சொல்லப் படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT