Published : 02 Apr 2014 10:35 AM
Last Updated : 02 Apr 2014 10:35 AM

பாஜக கூட்டணியில் இல்லாத கட்சிகளிடம் தேர்தலுக்கு பிறகு ஆதரவு கேட்கும் நிலை வராது:இல.கணேசன் நம்பிக்கை

கூட்டணியில் இல்லாத கட்சிகளிடம் தேர்தலுக்குப் பிறகு ஆதரவு கேட்கும் நிலையை மக்கள் ஏற்படுத்தித் தரமாட்டார்கள். பாஜக பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் இல.கணேசன் கூறினார்.

தென்சென்னை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் இல.கணேசன், செவ்வாய்க்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

எங்கள் கட்சித் தலைவர் ராஜ் நாத் சிங் கூறியதுபோல, பாஜக பெரும்பான்மையோடு வெற்றி பெற்றாலும், ஆட்சியமைக்கும் போது கூட்டணிக் கட்சிகளையும் அழைப்போம். தேர்தலுக்கு முன் ஆதரவு தராத கட்சிகளிடம் தேர்த லுக்குப் பிறகு ஆதரவு கேட்க வேண்டிய அவசியத்தை மக்கள் எங்களுக்கு ஏற்படுத்தித்தர மாட்டார் கள். பாஜக பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.

நாங்கள் அதிமுக, திமுகவை விமர்சிக்கவில்லை. ஏனென்றால், இது பிரதமர் பதவிக்கான தேர்தல். எனவே, அதற்கு முக்கியத்துவம் தர வில்லை. அதோடு திமுக, அதிமுக இரு கட்சியினரும் ஒருவரை மாற்றி ஒருவர் குற்றம் சொல்லிக் கொள்கிறார்கள். எங்களுக்கு இருக்கும் கொஞ்சம் நேரத்தை அதில் செலவிட விரும்பவில்லை.

மத்தியில் காங்கிரஸ் அரசை அகற்றி, நரேந்திர மோடி தலைமை யில் ஆட்சியமைக்க வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம். தமிழகத்தில் திமுக, அதிமுகவுக்கு மாற்று அணியாக பாஜக அணி உருவாகியிருக்கிறது. 1967-க்குப் பிறகு இரு கட்சிகளின் ஆட்சி மீது மக்களுக்கு விரக்தி ஏற்பட்டுள்ளது. அவர்களை எதிர்த்து சரியான பலத்தோடு நாங்கள் மாற்று அணியாக உருவாகி இருக்கிறோம்.

இந்தக் கூட்டணி உடைந்து போய்விடும் என்று சிலர் கூறுகின்ற னர். அவர்களின் எண்ணம் நிறை வேறாது. வெவ்வேறு கருத்துகள் கொண்ட கட்சிகளாக இருப்பதால் தான் நாங்கள் கூட்டணியாக இருக் கிறோம். ஒரே கொள்கையைக் கொண்டிருந்தால் நாங்கள் ஒரே கட்சியாகவே இருந்திருப்போமே. நாட்டின் நலனுக்காக நாங்கள் கூட்டணியாகச் சேர்ந்து மோடி பிரதமராக வேண்டும் என்று ஒரே நோக்கத்தோடு பிரச்சாரம் செய்து வருகிறோம். இவ்வாறு இல.கணேசன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x