Published : 25 Feb 2015 10:17 AM
Last Updated : 25 Feb 2015 10:17 AM

அறிவுச் செல்வங்கள் அனைத்தும் தமிழில் நூலாக வர வேண்டும்: தமிழ் வளர்ச்சி அரசுச் செயலர் பேச்சு

பல்வேறு துறை சார்ந்த அறிவுச் செல்வங்கள் அனைத் தும் தமிழில் நூலாக வெளிவர வேண்டும் என்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறைச் செயலாளர் முனைவர் மூ.இராசாராம் கூறினார்.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் நடத்திய ‘தமிழ்த் தாய் 67- பெருவிழா’வுக்கு தலைமையேற்று, தமிழின் அரிய புதிய தமிழ் நூல்களை வெளியிட்டு, அரசுச் செயலாளர் முனைவர் மூ.இராசாராம் பேசியதாவது:

நூற்றாண்டுகளுக்கு முந்தைய அரிய தமிழ் நூல் கள் மற்றும் புதிய ஆராய்ச்சி நூல்கள் என இன்றைக்கு 171 நூல்கள் வெளியிடப் பட்டுள்ளன. உண்மையில் இப்படியொரு நிகழ்ச்சி இதுவரை நடைபெற்றதாக தெரியவில்லை. 1859-ல் வெளியான தமிழ் செய்யுட் கலம்பகம், 1862-ல் வெளியான சத்குரு மாலை போன்ற நூல்கள் இன்றைக்கு மறுபதிப் பாகியுள்ளன. இந்த அரிய தமிழ் நூல்கள் பல இடங்களில் கண்டெடுக்கப்பட்டு நூலாகி யுள்ளன. நாம் திட்டமிட்டு, முன் தயாரிப்போடு செய் தால் எதையும் சிறப்பாக செய்ய முடியுமென்பதை இந்த நூல்களின் வெளியீடு காட்டி யுள்ளது. இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழ் வளர்ச்சிக்கான நல்ல பல திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

சமூக பொருளாதாரத்தில் பின்தங்கியிருந்த நாடுகளான தைவான், கொரியா போன் றவை இன்று முன்னேறுவதற்கு அவை கடைப்பிடித்த ‘நாளை செய்ய வேண்டியதை இன்றே செய்’ என்கிற செயலாற்றல்தான் காரணம். அப்படியான செய லூக்கத்தை நாம் பெற வேண்டும். தமிழர்களாகிய நாம் நம் மொழியின்மீது அக்கறை கொண்டு, ஆங்கிலக் கலப்பில் லாமல் தமிழ் பேசுவதற்கு பழக வேண்டும். அதேபோல், காலமாற்றத்துக்கு ஏற்ப புதிய அறிவியல் கண்டுபிடிப்பு களுக்கான தமிழ்ச் சொற் களையும் உருவாக்க வேண்டி யவர்களாய் இருக்கின்றோம் என்றார். இந்த விழாவில், தமிழ் வளர்ச்சி இயக்குநர் முனைவர் கா.மு.சேகர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன், எழுத்தாளர் தாயம்மாள் அறவாணன், மதுரை உலகத் தமிழ்ச் சங்க தனி அலுவலர் முனைவர் க.பசும்பொன், தமிழ்த்தாய் அறக்கட்டளை பொதுச் செயலாளர் கவிஞர் உடையார்கோயில் குணா, நூலகர் இரா.பெருமாள்சாமி, திருவண்ணாமலை தமிழ்ச் சங்கத் தலைவர் பா.இந்திரராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x