Published : 01 Apr 2014 10:38 AM
Last Updated : 01 Apr 2014 10:38 AM

வனப் பகுதியில் அடிக்கடி தீ விபத்து: விலங்குகள் இடம்பெயரும் அபாயம்

கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் பரனூர், காட்டாங்கொளத்தூர் வனப் பகுதியில் கடந்த சில நாட்களாக தீ பரவி வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம் திருக் கழுக்குன்றம் மற்றும் ஆப்பூர் பகுதியில் உள்ள வனப் பகுதியில் தீ பரவியது. இதே போல் செங்கல்பட்டு அடுத்த பரனூர், காட்டாங்கொளத்தூர் வனப் பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக தீ பரவி வரு கிறது. இதனால் அந்த வனப் பகுதி யில் வாழ்ந்து வரும் வன விலங்கு களான குரங்குகள், பாம்புகள் உள்ளிட்டவை, குடியிருப்புகளை நோக்கி இடம்பெயர்ந்த வண்ணம் இருக்கின்றன. இதனால் குடியிருப்பு பகுதியில் வசிப்போர் சிரமத்துக்குள்ளாகின்றனர்.

பரனூர் சுங்கச் சாவடி பகுதி யில் நிறுத்தப்படும் கனரக வாகனங் களின் ஓட்டுநர்கள், பரனூர் வனப் பகுதியை திறந்த வெளி கழிப்பிடமாக பயன் படுத்திவருகின்றனர். புகைப் பிடித்துவிட்டு சிகரெட், பீடித் துண்டுகளை வீசுவதாலும் தீ விபத்து ஏற்படுவதாக தெரிகிறது. இதில் வனத்தில் இருக்கும் பல் வேறு உயிரினங்கள் இறப்பதும் சில விலங்குகள் குடியிருப்பு பகுதிகளை நோக்கி நகர்வதாகவும் இயற்கை ஆர்வலர்கள் தெரிவிக் கின்றனர்.

இதுகுறித்து செங்கல்பட்டு வன அதிகாரி கோபுவிடம் கேட்ட போது அவர் கூறியதாவது: பரனூர், காட்டாங்கொளத்தூர், திருக் கழுக்குன்றம், ஆப்பூர் ஆகிய வனப் பகுதிகளில் தீ பரவியது எங்களுக்கு தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து மறைமலை நகர் மற்றும் திருக்கழுக்குன்றம் தீயணைப்பு நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தோம். அவர்கள் தீயணைப்பு வாகனங்களுடன் வந்து தீயை அணைத்தனர். மேலும் டிராக்டர்கள் மூலம் டேங்குகளில் நீர் கொண்டுவரப்பட்டு, சிறு சிறு தீயையும் தெளிப்பான்கள் மூலமாகவும் அணைத்து வரு கிறோம். தீயணைப்பு பணியில், வனத் துறையினர், தீயணைப்பு துறையினர், அப்பகுதி குடியிருப்பு வாசிகளும் ஈடுபட்டு, தீயை திங்கள் கிழமை முற்றிலுமாக அணைத்து விட்டோம். வனப்பகுதியில் தீ வைக்கக் கூடாது என்பது குறித்து வனப்பகுதியைச் சுற்றிள்ள பகுதிகளில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரு கிறோம். இருப்பினும் ஒரு சில நேரங்களில் தீ ஏற்பட்டுவிடுகிறது. இவ்வாறு கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x