Published : 28 Apr 2014 10:32 AM
Last Updated : 28 Apr 2014 10:32 AM
வரும் கல்வி ஆண்டில் சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் வேலைவாய்ப்புக்கென தனிப் பிரிவு தொடங்கப்படும் என சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஆர்.தாண்டவன் தெரிவித்தார்.
சென்னை பல்கலைக்கழகத் தில் எம்பிஏ படித்த மாணவர் களுக்கு டி.சி.எஸ்., ஹெச்.சி.எல். உள்ளிட்ட நிறுவனங்கள் தேர்வுகளை நடத்தி, 60 மாணவர் களை தேர்வு செய்துள்ளன. அவ்வாறு தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பணி ஆணை வழங்கும் விழா மற்றும் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி சென்னை பல்கலைக்கழக சேப் பாக்கம் வளாகத்தில் ஞாயிற்றுக் கிழமை நடந்தது. துணைவேந்தர் ஆர்.தாண்டவன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பணி ஆணைகளை வழங்கி பாராட்டு தெரிவித்தார். பின்னர், அவர் பேசியதாவது:
சென்னை பல்கலைக்கழகத் தில் 73 துறைகள் உள்ளன. இவற்றில், முக்கியமான துறை களில் ஒன்றாக மேலாண்மை படிப்பு துறையும் விளங்குகிறது. தற்போது 60 மாணவர்கள் பணி ஆணைகளைப் பெற்றுள்ளனர். கிராமப்புற விவசாய குடும்பத்தில் இருந்து அதிகமான மாணவர்கள் வந்து படிக்கின்றனர்.
எனவே, அவர்களுக்கு வேலை வாய்ப்பு என்பது முக்கியமான தாக இருக்கிறது. அவர்களுக்கு வேலைவாய்ப்புகளை பெற்றுத் தரும் நடவடிக்கைகளை பல் கலைக்கழகம் மேற்கொண்டு வருகிறது.
வரும் கல்வி ஆண்டில் இந்த வளாகத்தில் வேலைவாய்ப்புக் கென தனிப் பிரிவு ஒன்று புதிதாக தொடங்கப்படவுள்ளது. பல்கலைக்கழகத்தில் உள்ள அனைத்து துறை மாணவர்களின் விவரங்களும் பதிவு செய்யப்பட்டு நிறுவனங்கள் மூலம் வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக் கப்படும் இதேபோல், ஹெல்த்கேர் மையமும், மாணவர்களுக்கு கவுன்சலிங் அளிக்க சிறப்பு மைய மும் உருவாக்கப்படும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் சென்னை பல்கலைக்கழக பதிவாளர் டாக்டர் பி.டேவிட் ஜவஹர், மேலாண்மை படிப்புத் துறை தலைவர் டாக்டர் பி.டி.சீனிவாசன் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT