Last Updated : 30 Apr, 2014 12:09 PM

 

Published : 30 Apr 2014 12:09 PM
Last Updated : 30 Apr 2014 12:09 PM

காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சைக்கு புதிய கருவி: புதுக்கோட்டை அரசு மருத்துவமனை மருத்துவர் கண்டுபிடிப்பு

காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சைக்குப் பயன்படக்கூடிய மவுத் ஹேக் ஹோல்டர் எனும் கருவியைக் கண்டுபிடித்துள்ளார் புதுக்கோட்டை முத்துலெட்சுமி ரெட்டி அரசு மருத்துவமனை மருத்துவர் எம்.பெரியசாமி.

காது, மூக்கு, தொண்டை அறு வை சிகிச்சையின்போது நோயா ளியின் வாய்ப் பகுதி திறந்த நிலை யில் இருக்க வேண்டும் என்பதற் காக வாய்ப் பகுதியில் வைக்கப் படும் மவுத் ஹேக் எனும் கரு வியை அசையாமல் பொருத்து வதற்காக 3 கம்பிகளால் இணைக் கப்பட்ட ஸ்டாண்ட் (ஹோல்டர்) பயன்படுத்தப்படும். நோயாளி அசையும்போதோ அல்லது ஏதா வது ஒரு அசைவின்போதோ ஸ்டாண்ட் விலகிவிடும். அப்போது, நோயாளியின் வாய்ப் பகுதி திடீ ரென மூடிக் கொண்டு அறுவைச் சிகிச்சை செய்வதில் சிரமம் ஏற்படும்.

இத்தகைய சிரமத்தைப் போக் கும் விதமாக புதுக்கோட்டை முத்து லெட்சுமி ரெட்டி அரசு மருத்துவ மனை மயக்கவியல் மருத்துவர் எம்.பெரியசாமி கண்டுபிடித்துள்ள மவுத் ஹேக் ஹோல்டர் எனும் கரு விக்கு அவரது பெயரைச் சேர்த்து பெரிஸ் மவுத்ஹேக் ஹோல்டர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இதைப் பயன்படுத்தி புதுக் கோட்டை அரசு மருத்துவமனை யில் கடந்த சனிக்கிழமை ஒரு வருக்கு காது, மூக்கு, தொண்டை அறுவைச் சிகிச்சை செய்யப் பட்டுள்ளது.

இதுகுறித்து கருவியை கண்டு பிடித்த மயக்கவியல் மருத்துவர் எம்.பெரியசாமி கூறியது:

“காது, மூக்கு, தொண்டை அறு வைச் சிகிச்சைக்கு என தற்போ துள்ள கருவியைப் பயன்படுத்து வதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. அதனைத் தவிர்க்கும் வித மாக கடந்த 6 மாதங்களாக முயன்று எளிமையாக தரமான கருவியைக் கண்டுபிடித்துள்ளேன்.

இந்தக் கருவியை வயது பேத மில்லாமல் 1 எம்.எம் அளவுக்க துல்லியமாக நகர்த்தலாம். பக்கவாட்டில் இருக்கும் இரண்டு ஸ்க்ரூ மூலம் இறுக்கி வைத்தால் விலகாது. அச்சமின்றி அறுவைச் சிகிச்சை செய்யலாம். மருத்துவர்களுக்கும், நோயாளிக் கும் சிரமம் இருக்காது. தற்போது பயன்படுத்தப்படும் கருவியின் விலை ரூ.1000. நான் வடிவமைத்துள்ள பெரிஸ் கருவி ரூ.500-க்கு கிடைக்கும். ஏற் கெனவே பிராண வாயு செலுத்து வதற்கு பெரிஸ் சுவாச கருவியும், மூக்குப் பகுதியை மூடுவதற்கு பெரிஸ் மூக்கு சுவாச கருவியும் கண்டு பிடித்து காப்புரிமை பெற்று தற்போது தென் இந்தியாவில் உள்ள தனியார் மருத்துவனைக ளில் பயன்பாட்டில் உள்ளது. அதை அரசு மருத்துவமனைகளிலும் பயன்படுத்த பரிந்துரைக்க வேண்டு மென அரசிடம் கோரியுள்ளேன். இக்கருவி தொடர்பான தகவல் களுக்கு 97509 69955 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

இக்கருவியை புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சைக்கு பயன் படுத்திய காது, மூக்கு தொண்டை மருத்துவர் ஏ.இந்திராணி கூறியது: “அறுவைச் சிகிச்சை தொடங்கு வதற்கு முன்பு எப்படி, எந்த நிலையில் வைத்தோமோ அதே நிலையிலேயே நழுவாமல் கருவி இருந்தது. இக்கருவி மிகவும் வசதியாக உள்ளது. கவனம் சிதறாமல் இருக்க அச்சமின்றி பயன்படுத்தலாம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x