Published : 01 Feb 2015 02:50 PM
Last Updated : 01 Feb 2015 02:50 PM
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு பீன்ஸ் வரத்து அதிகரித்ததால் அதன் விலை சரிந்துள்ளது. இதைத் தொடர்ந்து 1 கிலோ பீன்ஸ் மொத்த விலையில் ரூ.10-க்கும் சில்லறை விலையில் ரூ.15-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இது குறித்து கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள பீன்ஸ் மொத்த வியாபாரி டி.எம்.கண்ணன் கூறியதாவது: கர்நாடகம், ஆந்திரம் மற்றும் தமிழக எல்லையோர பகுதிகளில் பீன்ஸ் பயிரிடப்பட்டு வருகிறது.
கடந்த ஜூன் மாதத்திலிருந்து நவம்பர் மாதம் வரை இப்பகுதிகளில் ஏற்பட்ட வறட்சி காரணமாக பீன்ஸ் விளைச்சல் குறைந்தது. இதனால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும் பீன்ஸின் அளவும் குறைந்தது. நாளொன்றுக்கு 24 டன் பீன்ஸ் மட்டுமே கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வந்ததால் அதன் விலை அதிகரித்து காணப்பட்டது.
பருவ மழைக்கு பிறகு டிசம்பர், ஜனவரி மாதங்களில் பீன்ஸ் விளைச்சல் அதிகரித்துள்ளது. அதனால் கோயம்பேடுக்கு வரும் பீன்ஸின் அளவு நாள் ஒன்றுக்கு 40 டன்னாக உயர்ந்துள்ளது. இதனால் ஒரு கிலோ ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த பீன்ஸ், தற்போது ரூ.10-லிருந்து ரூ.15- வரை விற்பனை செய்யப்படுகிறது. ஏப்ரல் மாதத்துக்கு பிறகு பீன்ஸ் விலை மீண்டும் உயரும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT