Published : 12 Feb 2015 08:43 AM
Last Updated : 12 Feb 2015 08:43 AM
பசுக்களை இறைச்சிக்காக கொல்வதைத் தடை செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கு இல்லை என்றும், இது மாநில அரசுகளின் தனிப்பட்ட அதிகார எல்லைக்குட்பட்டது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பொங்கல் திருநாளில் வழக்கமாக நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் இந்த ஆண்டு முதல் நிறுத்தப்பட்டுள்ளது. மிருக வதைத் தடுப்புச் சட்டத்தின் கீழ், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் ஜல்லிக்கட்டுக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை.
இதற்கிடையே இந்தியாவின் தேசிய விலங்காக புலிக்குப் பதில் பசுவை அறிவிக்க வேண்டும், பசுவை இறைச்சிக்காகக் கொல் வதைத் தடுக்கும் வகையில் சட்டம் கொண்டு வர வேண்டுமென்று பல் வேறு அமைப்புகளின் சார்பில் மத்திய, மாநில அரசுகளுக்கு கடிதங் கள் அனுப்பப் பட்டுள்ளன. இந்தக் கடிதங்களின் அடிப்படையில், மத்திய கால்நடைப் பராமரிப்புத் துறை சார்பில் அனைத்து மாநிலங் களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப் பட்டுள்ளது.
இந்த சுற்றறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு: மத்திய கால்நடை பராமரிப்பு, பால் வளம் மற்றும் மீன் வளத்துறைக்கு தொடர்ந்து பல்வேறு மாநிலங்களி லிருந்து அதிக அளவில் மனுக்கள் வந்தவண்ணம் உள்ளன. அதில் பசுக்களை இறைச்சிக்காகக் கொல் வதைத் தடுக்கவேண்டும், உள்ளூர் பசுக்களை வெளி நாட்டு கால்நடை களுடன் இணை சேர்க்கக் கூடாது. பசுக்களைக் கொல்லும் இறைச்சிக் கூட உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகள் வந்துள்ளன.
இந்த கோரிக்கை தொடர்பாக ஏற்கெனவே மாநிலங்கள் இரண்டு விதிமுறைக்குள் கட்டுப்படுத்தப் பட்டுள்ளன. கறவை கால்நடை களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், நாட்டில் பால், பால் பொருட்களின் தேவையை பூர்த்தி செய்வதை உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட் டுள்ளது. பசுக்களைக் கொல்வதைத் தடை செய்வது, இறைச்சிக் கூடங் களின் உரிமங்களை ரத்து செய்தல் போன்ற கோரிக்கைப் பொறுத்த வரை, இதற்காக சட்டம் இயற்றும் அதிகாரம் ஒவ்வொரு மாநிலங் களின் சட்டப்பேரவைகளுக்குட் பட்ட தனிப்பட்ட அதிகாரத்தின் கீழ் அமைந்துள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் 246 (3) வது பத்தியில் இந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி கேரளம், அருணாச் சலப் பிரதேசம், மேகாலயா, மிசோராம், நாகாலாந்து மற்றும் லட்சத்தீவு யூனியன் பிரதேசம் ஆகியவற்றில் பசு வதையைத் தடுப்பதற்கான சட்டங்கள் அமலில் இல்லை. மற்ற மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும், பசு உள்ளிட்ட கறவைக்கான கால்நடைகளை இறைச்சிக்காக கொல்வதைத் தடை செய்யும் சட்டம் அமலில் உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT