Published : 01 Apr 2014 12:00 AM
Last Updated : 01 Apr 2014 12:00 AM

டாஸ்மாக் அம்மாவிடம் இருந்து விடுபடுங்கள்: பிரேமலதா விஜயகாந்த்

டாஸ்மாக் அம்மாவிடமிருந்து விடுபடவேண்டும் என விஜயகாந்த் மனைவி பிரேமலதா தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

விழுப்புரம் அருகே கெடார் கிராமத்தில் விழுப்புரம் (தனி) தொகுதி வேட்பாளர் உமாசங்கரை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை இரவு விஜயகாந்த் மனைவி பிரேமலதா பிரச்சாரம் செய்தார். அவர் பேசியதாவது:

நாளைய இந்தியாவைத் தீர்மானிக்கும் சக்தி இளை ஞர்களாகிய உங்களிடம் உள்ளது. பெரும் ஊழலில் உள்ள திமுக, அதிமுகவை அகற்றும் வலிமை உங்களிடம்தான் உள்ளது. உரலுக்கு ஒரு பக்கம் இடி, மத் தளத்திற்கு இரண்டு பக்கமும் இடி என்பார்கள்.

ஏற்கனவே விவசாயம் செய்ய முடியாத நிலையில் இருக்கும் இம்மாவட்ட விவசாயிகளுக்கு தானே புயலினால் பாதிப்பு ஏற் பட்டது.

இக்கூட்டணி விவசாயிகளின் கூட்டணி. எல்லா மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பை உருவாக்கும் கூட்டணி. கடந்த 3 ஆண்டுகளாக எந்தத் திட்டத்தையும் ஜெயலலிதா நிறைவேற்றவில்லை. அவரது ஒரே சாதனை டாஸ்மாக் விற் பனையை உயர்த்தியதுதான். டாஸ் மாக்கில் குடித்துவிட்டு அம்மா உணவகத்தில் சாப்பிடுகிறார்கள். அதிலும் தரமான உணவு இல்லை என்றார்.

அப்போது கூட்டத்திலிருந்து ஒருவர் குடிபோதையில் பேசிய தாகக் கூறப்படுகிறது. இதைக் கேட்ட பிரேமலதா,”திருவிழாவில் ஆத்தா இறங்கிவிட்டாள் என்பார் கள். அதுபோல இப்போது உங்களிடம் டாஸ்மாக் அம்மா இறங்கிவிட்டார்.

இந்த அம்மாவிடம்இருந்து விடுபடுங்கள். அப்போதுதான் உங்களை உங்கள் உற்றார், உறவினர், சகோதரர்கள் மதிப் பார்கள். மனவேதனையுடன் சொல்கிறேன். நீங்கள் முதலில் இதிலிருந்து விடுபடுங்கள்” என்று பிரேமலதா பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x