Published : 26 Feb 2015 09:15 AM
Last Updated : 26 Feb 2015 09:15 AM

வருவாய்த்துறை நேரடி நியமன உதவியாளர்களின் பதவி உயர்வு காலதாமதத்தை தவிர்க்க புதிய விதிமுறை

வருவாய்த் துறையில் பணியாற்றும் நேரடி நியமன உதவியாளர்களின் பதவி உயர்வு காலதாமதத்தை தவிர்க்க புதிய விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணி யாற்ற வேண்டும் என்று கட்டுப்பாடு நீக்கப்படுகிறது.

அரசு நிர்வாகத்தின் முதுகெலும் பாகத் திகழ்வது வருவாய்த்துறை. அனைத்து விதமான அரசு நலத்திட்ட உதவிகளும் வருவாய்த்துறை மூலமாகவே வழங்கப்படுகின்றன. வருவாய்த் துறையில் பணி யாற்றும் நேரடி நியமன உதவி யாளர்கள், தமிழ்நாடு அரசு பணி யாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பி எஸ்சி) குரூப்-2 தேர்வு மூல மாக வருவாய் உதவியாளர் என்ற பணி அந்தஸ்தில் நியமிக்கப் படுகிறார்கள்.

ஐந்தாண்டுகள் பணியாற்றி துறைத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற நேரடி உதவியாளர்கள் துணை வட்டாட்சியர் பதவி உயர்வு பெறும் தகுதியை அடைகிறார்கள். இந்த 5 ஆண்டு காலத்தில் ஓராண்டு தாலுகா பயிற்சி, 2 ஆண்டுகள் வருவாய் ஆய்வாளர், ஓராண்டு 8 மாதங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றியிருக்க வேண்டும்.

அண்மைக் காலமாக நேரடி உதவியாளர்கள் குரூப்-2 தேர்வு மூலமாக ஆயிரக்கணக்கில் நிய மிக்கப்பட்டு வந்ததால் அனைவ ராலும் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் ஓராண்டு 8 மாதங்கள் பயிற்சியை பெற இயலவில்லை. இதனால், பணியில் சேர்ந்து 5 ஆண்டு கடந்தும் இப்பயிற்சியை முடிக்காத காரணத்தால் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் துணை வட்டாட்சியராக பதவி உயர்வு பெற முடியவில்லை.

இந்த காலதாமதத்தை தவிர்க் கும் வகையில் தமிழக அரசு புதிய விதிமுறையை கொண்டு வந்துள்ளது. அதன்படி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஓராண்டு 8 மாதங்கள் பணிபுரிய வேண்டும் என்ற கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அல்லது வருவாய்த் துறையின் இதர அலகு அலுவலகங்களில் (தாலுகா அலுவலகம், கோட்டாட்சியர் அலு வலகம், நிலச் சீர்திருத்த அலுவலகம் போன்றவை) பணிபுரிய வேண்டும் என்று திருத்தம் செய்து வருவாய்த் துறை செயலர் ஆர்.வெங்கடேசன் உத்தரவு பிறப்பித்துள்ளார் (அரசாணை எண் 93, நாள் 20.2.2015).

இதுகுறித்து தமிழ்நாடு வரு வாய்த் துறை (குரூப்-2) நேரடி நியமன அலுவலர் சங்க மாநில தலைவர் எஸ்.தனலிங்கம் கூறுகையில், “மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்டிப்பாக பணிபுரிய வேண்டும் என்ற விதிமுறையை நீக்குமாறு அரசிட மும், வருவாய் நிர்வாக ஆணைய ரிடமும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தோம்.

எங்கள் கோரிக்கையை நிறைவேற்றியதற்காக அரசுக்கு நன்றி. அரசின் இந்த உத்தரவு மூலம் ஏறத்தாழ 4 ஆயிரம் பேர் பயன்பெறுவார்கள்” என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x