Published : 08 Feb 2015 11:10 AM
Last Updated : 08 Feb 2015 11:10 AM

தொழில் பழகுநர் பயிற்சி வாரியம் மூலம் தமிழகத்தில் ஓராண்டில் 27,746 இளைஞர்களுக்கு பயிற்சி

மத்திய அரசின் தென்னிந்திய தொழில் பழகுநர் பயிற்சி வாரியம் மூலமாக 2014-ம் ஆண்டில் தமிழகத்தைச் சேர்ந்த 27 ஆயிரத்து 746 இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் தன்னாட்சி பெற்ற நிறுவனமாக தென்னிந்திய தொழில் பழகுநர் பயிற்சி வாரியம் இயங்கி வருகிறது. தமிழ்நாடு, ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் இதன் சேவை பகுதிகளாக உள்ளன. இவ் வாரியம் மூலம் பொறியியல் பட்டம், பட்டயம், மேல்நிலைக் கல்வி முடித்தவர்களுக்கு மாத உதவித்தொகையுடன் ஓராண்டு தொழில் பழகுநர் பயிற்சி வழங் கப்பட்டு வருகிறது.

இப்பயிற்சி அந்தந்த மாநிலங் களில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு தென்னிந்திய அளவில் தமிழகத்தில்தான் அதிக அளவில் இளைஞர்கள் பயிற்சி பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் மொத்தம் 25 ஆயிரத்து 401 பொறியியல் பட்ட தாரிகள் உட்பட 27 ஆயிரத்து 746 இளைஞர்கள் பயிற்சி பெற்றுள் ளனர். ஆந்திர மாநிலத்தில் 9 ஆயிரத்து 435 பேரும், கர்நாடக மாநிலத்தில் 9 ஆயிரத்து 245 பேரும், கேரள மாநிலத்தில் 5 ஆயிரத்து 521 பேரும் இப்பயிற்சியை பெற் றுள்ளனர்.

இந்தப் பயிற்சிக்கு பிறகு தொழில் பழகுநர் வாரியம் வழங்கும் சான்றிதழ் மூலம் பல்வேறு அரசுத்துறை வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை வழங்கப்படுகிறது.

இதுபற்றி வாரியத்தின் தென் மண்டலத் தலைவர் ஏ.அய்யா கண்ணுவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

தமிழக இளைஞர்களிடம் இந்த பயிற்சி பற்றி அதிக விழிப்புணர்வு உள்ளது. பொறியியல் கல்லூரி களும், பன்னாட்டு தொழில் நிறுவனங்களும் தமிழகத்தில் அதிகமாக உள்ளன. அதனால் எங்கள் வாரியத்தின் இணைய தளமான www.boat-srp.com ல் எளிதாக இளைஞர்கள் பதிவு செய்து, தொழில் பழகுநர் பயிற்சி பெற்றுவிடுகின்றனர்.

மற்ற மாநிலங்களிலும் பயிற்சி பெறும் இளைஞர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஹைதரபாத் மற்றும் பெங்களூரில் எங்கள் கிளை அலுவலகங்களை திறந்திருக்கிறோம். தற்போது மாத உதவித்தொகையையும் உயர்த்தி இருக்கிறோம். நேர் காணலுக்கான கடிதத்தை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யும் வசதியையும் ஏற்படுத்தி இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x