Published : 26 Feb 2014 12:00 AM
Last Updated : 26 Feb 2014 12:00 AM
கள்ளக்குறிச்சி தொகுதி நடப்பு எம்.பி-யும் ஸ்டாலினின் ஆதரவாளருமான ஆதிசங் கருக்கா? முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதம சிகாமணிக்கா? கனிமொழி ஆதரவாளரான வழக்கறிஞர் செல்வ விநாயகத்துக்கா? என விழுப்புரம் மாவட்ட திமுக-வில் விறுவிறு விவாதம் நடந்து கொண் டிருக்கிறது.
நான்குமுனைப் போட்டியில்..
விழுப்புரம் திமுக-வில் அனைத்து அதிகாரமும் கொண் டவராக இருக்கிறார் மாவட்டச் செயலாளர் பொன்முடி. கடந்த முறை பொன்முடியை சமாதானப் படுத்தித்தான் ஆதிசங்கரை கள்ளக்குறிச்சியில் நிறுத்தியது திமுக. பாமக, திமுக, தேமுதிக, லட்சிய திமுக - இந்த நான்கு முனைப் போட்டியால் எளிதில் வெற்றிபெற்றார் ஆதிசங்கர்.
இந்த நிலையில் மீண்டும் கள்ளக்குறிச்சி தொகுதி மீது கண் வைத்திருக்கும் ஆதிசங்கர், ஒருவேளை இந்தத் தொகுதி கூட்ட ணிக்கு ஒதுக்கப்பட்டால் கடலூரில் போட்டியிடலாம் என்ற திட்டத்தில் அந்தத் தொகுதிக்கும் விருப்ப மனு கொடுத்திருக்கிறார்.
ஆனால், இந்தமுறை தனது மகன் கவுதம சிகாமணி அல்லது தனது தீவிர விசுவாசியான வசந்தம் கார்த்திகேயனுக்கு கள்ளக்குறிச்சியில் வாய்ப் பளிக்க வேண்டும் என பொன் முடி மெனக்கெடுவதாகச் சொல்கி றார்கள்.இவர்களுக்கு மத்தியில், இன்னொருவரும் வருகிறார்.
கடந்த ஆண்டு திண்டிவனத்தில் கலை இலக்கிய பகுத்தறிவு பாசறை தொடங்குவதற்காக பிரமாண்ட கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தவர் வழக்கறிஞர் செல்வ விநாயகம். தன்னுடைய அனுமதி இல்லாமல் இந்தக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள் என்று சொல்லி பாசறை கூட்ட நிகழ்ச்சிக்கு கனிமொழியை வர விடாமல் தடுத்தார் பொன்முடி. ஆனாலும், கனிமொழி வட்டாரத்தில் தொடர்ந்து செல் வாக்குள்ள மனிதராக வலம் வந்து கொண்டிருக்கிறார் செல்வ விநாயகம்.
கனிமொழி வலியுறுத்தல்
வடமாவட்டங்களில் வன்னியர்களுக்கு திமுக-வில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என கட்சித் தலைமையிடம் தொடர்ந்து வலி யுறுத்தி வருகிறார் கனிமொழி.
எனவே, வன்னியரான தனக்கு இந்த முறை கள்ளக்குறிச்சி தொகுதியை பெற்றுத் தருவார் என செல்வவிநாயகம் பெரிதும் நம்புகிறார். இதில் யார் முந்தப் போகிறார்கள் என்பது கட்சித் தலைமையின் முடிவில்தான் உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT