Published : 21 Feb 2015 10:08 AM
Last Updated : 21 Feb 2015 10:08 AM

நான்கு ஆண்டுகளில் 6,972 கோயில்களில் குடமுழுக்கு: அமைச்சர் ஆர்.காமராஜ் பெருமிதம்

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, அதிமுக உறுப்பினர் சோழன் சித.பழனிச்சாமியின் கேள்விக்கும், திமுக உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜாவின் துணைக் கேள்விக்கும் உணவு மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ஆர். காமராஜ் அளித்த பதில் வருமாறு:-

காரைக்குடி தொகுதி, சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், ஜெயங்கொண்டான் பாலசுப்பிரமணியசுவாமி கோயில் தெப்பக்குளத்தை தூர்வாருவதற்கு தேவையான அளவுக்கு கோயிலுக்கு வருமானம் இல்லாத போதிலும், இந்த தெப்பக்குளத்தை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு ரூ.6 லட்சம் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

சிதிலமடைந்த கோயிலே இல்லை என்ற நிலையை உருவாக்கவும், குடமுழுக்கு முடிந்து 12 ஆண்டுகள் ஆன கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளவும் அரசு உறுதி பூண்டுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் 6,972 கோயில்களில் திருப்பணிகள் முடிந்து குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. இது ஒரு வரலாற்றுச் சாதனையாகும். தொன்மையான 250 கோயில்களில் ரூ.90 கோடியில் திருப்பணிகள் நடந்துள்ளன. கோயில் குளங் களைப் பொருத்தவரை 1,586 கோயில்களில் 2,359 குளங்கள் உள்ளன. இதில், 1,068 குளங்களை புனரமைக்க வேண்டியுள்ளது.

மன்னார்குடியில் உள்ள ராஜ கோபாலசாமி திருக்கோயிலில் 322 ஆண்டுகளுக்குப் பிறகு அதிமுக ஆட்சியில் 1995-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அங்குள்ள ஹரித்ராநதி தெப்பக்குளத்தை செப்பனிட்டு படகுசவாரி போன்ற வசதிகளுடன் பொழுதுபோக்கு தலமாக மாற்ற வேண்டும் என்று உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா கோரியுள்ளார். அந்த குளம், கடந்த அதிமுக ஆட்சியில்தான் (2001-06) முழுமையாக தூர்வாரப்பட்டது என்றார் அமைச்சர்.

தொன்மையான 250 கோயில்களில் ரூ.90 கோடியில் திருப்பணிகள் நடந்துள்ளன. கோயில் குளங்களைப் பொருத்தவரை 1,068 குளங்களை புனரமைக்க வேண்டியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x