Published : 15 Feb 2015 10:28 AM
Last Updated : 15 Feb 2015 10:28 AM

இலங்கை அதிபரின் வருகையால் தமிழர்களுக்கு வழி பிறக்கும்: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் இந்திய வருகை, இந்தியா- இலங்கை நல் உறவுக்கான மற்றொரு புதிய தொடக்கமாக அமையும் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கோவையில் 1998 பிப்ரவரி 14-ல் நடந்த தொடர் குண்டு வெடிப்பு தினத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, மத்திய கனரக மற்றும் தொழில் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று கோவை வந்தார்.

கோவை ரயில் நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் இந்திய வருகை, இந்தியா-இலங்கை உறவுக்கான நல்ல ஒரு தொடக்கமாக அமையும். இலங்கை தமிழர் மற்றும் தமிழக மீனவர் உரிமைகளைக் காக்க பிரதமர் மோடி ஆர்வமாக இருக்கிறார். அதற்கேற்ப இலங்கை அதிபரின் வருகை, இலங்கை தமிழர்களுக்கு ஒரு புதிய வழியை காட்டும்.

இலங்கை பிரச்சினையை வைத்து சில அரசியல் கட்சியினர் போராட்டங்களை நடத்தி பிழைப்பு நடத்த வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர். அவர்கள், அரசு நடத்த தயாராக இல்லை.

இலங்கை தமிழர்களை பழிவாங்கும் நடவடிக்கையில் காங்கிரஸ் அரசு ஈடுபட்டது, ஆனால், தமிழர்கள் சர்வ உரிமை மற்றும் அதிகாரத்துடன் வாழ பாஜக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி என்பது, கடந்த முறை பதவி விலகியதற்காக அர்விந்த் கேஜ்ரி

வால், மக்களிடம் கேட்ட மன்னிப்புக்கான அங்கீகாரமே ஆகும். பாஜக கடந்த தேர்தலை விட கூடுதல் வாக்குகளை பெற்றிருப்பதால் இதை தோல்வியாகக் கருத முடியாது.

கருணாநிதி கடிதம்

பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் கருணாநிதி கடிதம் எழுதியது குறித்த கேள்விக்கு, ‘தமிழக மீனவர் பிரச்சினையில் கருணாநிதி சொல்லி நடவடிக்கை எடுக்கும் அவசியம் எங்களுக்கு கிடையாது. அப் பிரச்சினையில் மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது” என்று பதிலளித்தார் ராதாகிருஷ்ணன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x