Published : 11 Feb 2015 10:55 AM
Last Updated : 11 Feb 2015 10:55 AM
இடைத்தேர்தல் என்றவுடன் தொடர் புடைய தொகுதியின் வாக்காள ருக்கு ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவில்லை என்ற நிலைதான் ஸ்ரீரங்கத்திலும் தொடர்கிறது.
சாத்தான்குளம் இடைத்தேர் தலில் தொடங்கப்பட்ட இலவச விநியோகம், திருமங்கலம் இடைத் தேர்தலில் உச்சக்கட்டத்தை எட்டியது. திருமங்கலத்தையும், மிஞ்சும் அளவுக்கு ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் வாக்காளர்களை மூச்சு முட்ட வைத்துள்ளது.
ஸ்ரீரங்கம் தொகுதி, இடைத்தேர்தல் அறிவிக் கப்பட்ட நாள் முதல் திருவிழா போன்றே காட்சியளிக்கிறது. மாட்டு வண்டிகள் கூட செல்லமுடியாத கிராமப்புறச் சாலைகளில் விதவிதமான சொகுசு கார்களின் அணிவகுப்புகள்.
தொகுதியில் தங்கி தேர்தல் பணிகளைக் கவனிக்க வந்தவர்கள், ஒவ்வோர் ஊராட்சியிலும் பந்தல் போட்டு, சமையல்காரர்களை நியமித்து தினந்தோறும் தடபுடல் உணவு உபசரிப்புடன், வேட்டி சேலை களுடன், வைட்டமின் `ப' வையும் வழங்குவதாகக் கூறப்படுகிறது. சிறு டைலர் கடைகள், சலவை கடைகள் எல்லாம் தற்காலிக மினி டிபன் செண்டர்களாக மாறியுள்ளன.
ஸ்ரீரங்கம் நகரப் பகுதியில் இரு தினங்களுக்கு முன் விடியற் காலையில் வீட்டின் கதவைத் திறந்தபோது பலருக்கு ஆச்சர் யம். வாசலில் வேட்டி, சேலைகளுடன், சில நூறு ரொக் கமும் கிடந்துள்ளது. சில இடங்களில், “என் வீட்டில் 10 ஓட்டுகள் இருக்கின்றன. எவ்வளவு கொடுப்பீர்கள்” என வாக்காளர்களே பேரம் பேசும் சம்பவங்களும் நிகழ்கின்றன.
ஸ்ரீரங்கத்தில் வாக்காளர்கள் மட்டுமல்ல; வணிகர்களுக்கும் கொண்டாட்டம்தான். பெட்டிக்கடை மற்றும் ஓட்டல்களிலும் விற்பனை படுஜோர். டாஸ் மாக் கடைகளுக்கு வரும் வாடிக் கையாளர்கள் அனைவருமே ஐநூறு ரூபாய் நோட்டை நீட்டு வதால் சில்லறைத் தட்டுப்பாடு அதி கரித்திருப்பதாக சொல்கிறார்கள்.
தேர்தல் ஆணையம் எத்தனை கெடுபிடிகள் காட்டி சோதனைகள் நடத்தினாலும், இடைத் தேர்தல் களில் அரசியல் கட்சியினரின் இலவச விநியோகம் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT