Last Updated : 23 Feb, 2015 11:33 AM

 

Published : 23 Feb 2015 11:33 AM
Last Updated : 23 Feb 2015 11:33 AM

அஞ்சலக ஆயுள் காப்பீட்டுத் திட்டத்துக்கு சேவை வரி: பொதுமக்கள் கடும் அதிர்ச்சி

அஞ்சலக ஆயுள் காப்பீட்டு திட்டம் மற்றும் கிராமப்புற அஞ்சலக ஆயுள் காப்பீட்டுத் திட்டத்துக்கு முன் அறிவிப்பின்றி சேவை வரி வசூலிக்கப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்திய அஞ்சல் துறையில் 1884-ம் ஆண்டு முதல் அஞ்சலக ஆயுள் காப்பீடு திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை கிராமப்புறங்களிலும் விரிவுபடுத்தும் நோக்கில் கிராமப் புற அஞ்சலக ஆயுள் காப்பீடு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

நாடு முழுவதும் அஞ்சலக ஆயுள் காப்பீடு திட்டத்தின் கீழ் கடந்த 2013-2014 நிலவரப்படி 54 லட்சத்து 6 ஆயிரத்து 93 கணக்கு களும். கிராமப்புற அஞ்சலக ஆயுள் காப்பீடு திட்டத்தின் கீழ் 1 கோடியே 50 லட்சத்து 14 ஆயி ரத்து 314 கணக்குகளும் உள்ளன. தமிழகத்தில் அஞ்சலக ஆயுள் காப்பீடு திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ.1,12,706.2 லட்சம் ஆகும்.

இந்த திட்டங்களின் கீழ் கணக்கு வைத்துள்ளவர்கள் கடந்த மாதம் காப்பீட்டுத் தொகைக்கான பிரீமி யம் தொகையை கட்டச் சென்றபோது, முன் அறிவிப்பு ஏதுமின்றி சேவை வரி வசூலிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 2007-ம் ஆண்டுக்கு முன்பாக சேவை வரி வசூலிக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் சேவை வரி வசூலிக்கப்பட்டது பொது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக அஞ்சலக ஆயுள் காப்பீடு திட்ட கணக்கு வைத் துள்ள கிருஷ்ணகுமார் என்பவர் கூறும்போது, “இந்த மாதம் ஆயுள் காப்பீட்டு தொகையை கட்டச் சென்றபோது எனது பிரீமியம் தொகையில் 1.54 சதவீத சேவை வரி வசூலிக்கப்பட்டது. இப்படி வசூலிப் பது பற்றி எந்த முன் அறிவிப்பும் இல்லை. இதை திரும்பப் பெற வேண்டும்” என்றார்.

இதுபற்றி சென்னை நகர மண்டல அஞ்சல்துறை அதிகாரி களிடம் கேட்டபோது, “இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (LIC) ஏற்கெனவே சேவை வரி வசூலித்து வருகிறது. அஞ்சல் துறை தற் போதுதான் சேவை வரியை வசூலிக்க ஆரம்பித்துள்ளது. ஆயுள் காப்பீடு கணக்கு தொடங் கிய முதல் ஆண்டில் மாதந் தோறும் கட்டுகிற பிரீமியம் தொகை யில் 3.09 சதவீதம் சேவை வரி வசூலிக்கப்படும். இரண்டாம் ஆண்டு முதல் 1.54 சதவீதம் சேவை வரி மட்டும் செலுத்தினால் போதும். இதுபற்றிய அறிவிப்பை கடந்த டிசம்பர் மாதமே அஞ்சலகங்களில் தகவல் பலகைகள் மூலம் வெளியிட்டிருந்தோம். சில ஊடகங்களிலும் இதனை அறிவித்திருந்தோம்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x