Published : 23 Feb 2015 11:20 AM
Last Updated : 23 Feb 2015 11:20 AM

புதுச்சேரியில் காங்கிரஸுக்கு நெருக்கடி: கண்ணன் எம்.பி. ஆதரவாளர்கள் புதிய இயக்கம் தொடக்கம் - அரசியல் கட்சியாக உருவாகலாம் என பேட்டி

கண்ணன் எம்.பி. ஆதரவாளர்கள் இணைந்து புதிய இயக்கத்தை நேற்று தொடங்கினர். புதிய இயக்கம் அரசியல் கட்சியாக உருவாக லாம் என்று கண்ணன் தெரிவித்தார்.

புதுச்சேரியில் மாநிலங்களவை எம்.பி.யாக கண்ணன் உள்ளார். கடந்த மக்களவைத் தேர்தலில் புதுச்சேரி வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் நாராயண சாமி அறிவிக்கப்பட்டவுடன் அதற்கு கண்ணன் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பலர் ராஜினாமா செய்தனர். மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் கண்ணன் ஈடுபட வில்லை.

தேர்தல் முடிவுக்கு பிறகு கண்ணன் மீது மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன் கட்சி மேலிடத்தில் புகார் அளித் தார். மேலிட பொறுப்பாளர் முகுல் வாசினிக் கண்ணனிடம் விளக்கம் கேட்டார். அதையடுத்து அவர் பதிலும் தந்தார். அதன்பிறகு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் புதுச்சேரி காங்கிரஸ் நிர்வாகிகள் மீதும், நாராயணசாமி மீதும் கண்ணன் நேரடியாக குற்றச்சாட்டு களை தெரிவித்து வந்தார்.

நீண்ட நாட்களுக்கு பிறகு ஆளுங்கட்சியான என்.ஆர்.காங் கிரஸ் அரசை கண்டித்து கடந்த நவம்பர் 27-ம் தேதி ஆர்ப் பாட்டம் நடத்தினார். மக்கள் ஆர்ப் பாட்டக்குழு என்ற பெயரில் அவர் இந்த போராட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது நகரின் பல இடங்களி லும் கண்ணனை மாநில அரசிய லுக்கு வரவேற்று பேனர்களை அவரது ஆதரவாளர்கள் வைத்தி ருந்தனர்.

மேலும் அவரது ஆதரவாளர்கள் காங்கிரஸ் கொடிக்கு மாற்றாக கண்ணன் உருவம் பொறித்த புதிய கொடியை ஏந்தியிருந்தனர். தொடர்ந்து காங்கிரஸ் கட்சி யையும், ஆளும் கட்சியையும் விமர்சித்து கண்ணன் பேட்டிகள் அளித்து வந்தார்.

இந்நிலையில் மக்கள் முன் னேற்ற இயக்கம் என்ற பெயரில் புதிய அரசியல் இயக்கத்தை கண்ணன் எம்.பி.யின் ஆதரவாளர் கள் நேற்று தொடங்கியுள்ளனர். காந்தி வீதியில் இதற்கான அலுவலக திறப்பு விழா நேற்று காலை நடை பெற்றது. காமராஜர்-கண்ணன் படத்துடன் இயக்க பேனர் வைக்கப் பட்டுள்ளது.

இதுதொடர்பாக அவரது ஆதர வாளர்கள் தரப்பில் கூறும்போது:

கண்ணன் ஏற்கெனவே இளை ஞர் காங்கிரஸ் தலைவர், சுகாதாரத் துறை அமைச்சர், உள்துறை அமைச்சர் என பல்வேறு பதவி களை வகித்தவர். தமிழ் மாநில காங்கிரஸ், புதுச்சேரி மக்கள் காங்கிரஸ் என புதுச்சேரியில் தனி அரசியல் கட்சி தொடங்கி நடத்தியவர். பின்னர் காங்கிரஸில் சேர்ந்து எம்.பி. ஆனார்.

அவரை அரசியல் இயக்கம் தொடங்க தொண்டர்கள் வலி யுறுத்தினோம். தற்போது புதிய இயக்கம் தொடங்கியுள்ளோம். அதி காலையில் நடந்த சிறப்பு பூஜையில் கண்ணன் எம்.பி. மற்றும் அவரின் ஆதரவாளர்கள் பங்கேற்றோம். தற்போது மாநிலங்களவை உறுப்பி னராக உள்ள கண்ணனின் பதவிக் காலம் வரும் செப்டம்பர் மாதம் வரை உள்ளது.

இந்த 6 மாத காலத்துக்குள் புதுச்சேரி முழுவதும் ஆதரவாளர் களை திரட்டி பலப்படுத்தும் நோக்க முள்ளது. வரும் செப்டம்பரில் இயக்கம் அரசியல் கட்சியாக மாறி தேர்தலை சந்திக்கும் திட்டமுள்ளது. பேரவைத் தேர்தலில் முக்கிய சக்தியாக இருப்போம். முதலில் தொகுதி வாரியாக இயக்கத்தை விரிவுபடுத்துவோம் என்றனர்.

இதுதொடர்பாக கண்ணன் எம்.பி கூறும்போது:

எனது ஆதரவாளர்கள் இயக் கத்தை தொடங்கியுள்ளனர். அவர் களுக்கு இயக்கம் தொடங்க எனது மனைவி பெயரிலுள்ள இடத்தை அலுவலகமாக தந்துள்ளேன். மற்றவை எல்லாம் அவர்கள்தான் செய்கிறார்கள்.

மக்கள் எண்ணத்தை பொறுத்து அரசியல் கட்சியாக புதிய இயக்கம் உருவாகலாம். நான் செல்லும் இடங்களில் மக்கள் தங்களது குறைகளை தெரிவிக்கிறார்கள். யாராவது புதிதாக வந்து குறை களை தீர்ப்பார்களா என்று எதிர்பார்க்கிறார்கள் என்று குறிப்பிட்டார். இதன் மூலம் பேர வைத் தேர்தலில் கண்ணன் களம் இறங்குவது உறுதியாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x