Published : 03 Apr 2014 12:25 PM
Last Updated : 03 Apr 2014 12:25 PM
ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதியை தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என, பழ.நெடுமாறன் வலியுறுத்தினார்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி தமிழகத்தோடு இணைந்த 55-வது ஆண்டு தொடக்க விழா, திருத்தணியில் நடைபெற்றது. மா.பொ.சி., அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சியில், பழ.நெடுமாறன் பேசியது: இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், நமக்கு தமிழக எல்லைகளை மீட்டுத் தந்தவரு மான சிலம்புச் செல்வர் மா.பொசி. தமிழக மக்கள் மீது பற்று கொண் டவர். 1960 ஏப்ரல் 1-ம் தேதி, எல்லைப் போராட்டத்தை நடத்தினார். தமிழகத்தின் வடக்கு, தெற்கு எல்லைகளை மீட்ட மா.பொ.சி.,யின் நினைவாக குமரியில் அவரது சிலையை நிறுவ தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னை மாநக ராட்சியின் ரிப்பன் மாளிகைக்கு அவரது பெயரைச் சூட்ட வேண்டும். ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பதியை தமிழகத்துடன் இணைக்க வேண்டும்.
சாந்தன், முருகன் பேரறிவாளன் ஆகியார் மீதான உச்ச நீதிமன்ற தீர்ப்பை நான் வரவேற்கிறேன். அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT