Published : 28 Apr 2014 08:35 AM
Last Updated : 28 Apr 2014 08:35 AM
முதல்வர் ஜெயலலிதா ஞாயிற்றுக் கிழமை, தோழி சசிகலாவுடன் சென்னையிலிருந்து கோடநாடு வந்தார்.
சென்னையிலிருந்து விமானத் தில் கோவை வந்த முதல்வர், அங்கிருந்து ஹெலிகாப்டரில் கோடநாடு வந்தார். கோடநாடு அருகேயுள்ள கர்சன் எஸ்டேட்டில் ஹெலிகாப்டர் மதியம் 1.45 மணிக்கு தரையிறங்கியது. அங்கிருந்து காரில் மதியம் சுமார் 2.20 மணிக்கு கோடநாடு எஸ்டேட் வந்தடைந்தார்.
கோடநாடு பங்களா நுழைவு வாயில் முன்பு மாவட்டச் செயலா ளர் கலைச்செல்வன், எம்.பி. அர்ஜூனன், ஆவின் இணையத் தலைவர் மில்லர், உதகை எம்.எல்.ஏ., புத்திசந்திரன், மேட்டு பாளையம் எம்.எல்.ஏ., சின்னராஜ், அ.தி.மு.க., வேட்பாளர் கோபால கிருஷ்ணன் உள்ளிட்டோர் வர வேற்றனர். முதல்வருக்கு தொண் டர்கள் உற்சாக வரவேற்பு அளித்த னர்.
நாடாளுமன்றத் தேர்தல் முடி வடைந்து முதல்வர் கோடநாடு வந்ததால் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எஸ்டேட் நுழைவு வாயிலில் திரண்டிருந்தனர். நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளான மே 16-ம் தேதி வரை முதல்வர் கோடநாட்டில் தங்கியிருப்பார். டிசம்பர் மாதம் கோடநாடு வந்து ஒரு மாத காலம் தங்கியிருந்த முதல்வர் மீண்டும் மூன்று மாதங்களுக்குப் பிறகு கோடநாடு வந்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT