Published : 22 Feb 2015 12:27 PM
Last Updated : 22 Feb 2015 12:27 PM

வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட ரூ.60 லட்சம் வேதிப்பொருட்கள் திருட்டு: சென்னையில் 5 பேர் கைது

ரூ.60 லட்சம் மதிப்புள்ள வேதிப்பொருட்களை திருடிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை பாரிமுனை கச்சாலீஸ்வரர் அக்ரஹாரம் தெருவில் வசிப்பவர் தனசேகரன். இவர் அதே பகுதியில் வெளி நாடுகளுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்யும் டிரான் ஸ்போர்ட் நிறுவனத்தை நடத்தி வருகிறார். புதுவையில் உள்ள ஒரு நிறுவனத்தில் இருந்து மெக்னீசியம், சிலிகான் போன்ற வேதிப்பொருட்களை கன்டெய்னரில் கொண்டு வந்து சென்னை துறைமுகம் வழியாக அமெரிக்கா, பெல்ஜியம், பிரேசில் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு கப்பல் மூலம் இவர் அனுப்பி வைத்தார்.

இந்நிலையில் இங்கிருந்து அனுப்பப்பட்ட வேதிப்பொருட் களின் எடை 45 டன் அளவுக்கு குறைந்திருப்பதாக அதை பெற்றுக்கொண்ட நாடுகளில் உள்ள முகவர்களிடம் இருந்து தனசேகரனுக்கு புகார்கள் வந்தன. இதுகுறித்து மணலி காவல் நிலையத்தில் அவர் புகார் கொடுத்தார்.

போலீஸார் நடத்திய விசாரணையில், கன்டெய்னர்களில் நூதன முறையில் திருட்டு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கன்டெய்னர் லாரிகளை இயக்கிய ஓட்டுநர்களிடமும், லாரி உரிமை யாளர்களிடம் போலீஸார் விசா ரணை நடத்தினர். இந்த விசாரணையில் வேதிபொருட்கள் திருட்டு பற்றிய உண்மைகள் தெரியவந்தன.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, “புதுவையில் இருந்து சென்னைக்கு வரும் வழியில் ஜிஎன்டி சாலையில் முருகன் என்பவருக்கு சொந்தமான குடோனில் வேதிப் பொருட்கள் கொண்டுவரப்பட்ட 11 லாரிகளையும் அதன் உரிமையாளர்கள் நிறுத்தி யுள்ளனர். பின்னர் கன்டெய்னரில் சுங்கத்துறை அதிகாரிகள் வைத்த சீல் உடையாமல் நூதன முறையில் அதை பிரித்து, கதவை திறந்து, உள்ளே இருந்த வேதிப்பொருட்களை திருடியுள்ளனர்.

பின்னர் கதவை பூட்டி, சீல் வைக்கப்பட்ட அதே துணியை சுற்றி, துறைமுகத்துக்கு லாரியை அனுப்பியுள்ளனர்.அவர்கள் திருடிய வேதிப்பொருட்களின் மதிப்பு ரூ.60 லட்சம். திருடப்பட்ட வேதிப்பொருட்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பாக கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் பாபு, பாலாஜி, மோகன்ராஜ் ஆகியோரையும், வேதிப்பொருட்களை பதுக்கி வைக்க உதவி செய்த முத்துமணி மற்றும் லாரி ஓட்டுநர் டேவிட் பீட்டர் ஆகிய 5 பேரை கைது செய்துள்ளோம். குடோன் உரிமையாளர் முருகன் மற்றும் முத்து ஆகியோரை தேடி வருகிறோம்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x