Published : 10 Jan 2015 10:57 AM
Last Updated : 10 Jan 2015 10:57 AM
தமிழகம் முழுவதும் ஜனவரி 15-ம் தேதி முதல் முடி வெட்டும் கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாக தமிழ்நாடு சவரத் தொழிலாளர் சங்கம் அறிவித்துள்ளது.
அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் எம்.முனிசாமி வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு சவரத் தொழிலாளர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் கடந்த 6-ம் தேதி சென் னையில் நடைபெற்றது. அழகு பொருட்கள் விலை உயர்வு, கடைகளுக்கான வாடகை உயர்வு, வேலை ஆட்கள் சம்பள உயர்வு ஆகிய காரணங்களால் முடி வெட்டும் கட்டணத்தை ஜனவரி 15-ம் தேதி முதல் உயர்த்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT