Published : 02 Jan 2015 09:17 PM
Last Updated : 02 Jan 2015 09:17 PM

ராமேசுவரம் தீவில் மின்சார வசதி இல்லாத மீனவ குடிசைகளுக்கு சோலார் வசதி

ராமேசுவரத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அறக்கட்டளையின் மூலம் மின்சார வசதி இல்லாத 100 மீனவ குடும்பங்களுக்கு சோலார் மின்சார சாதனங்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

ராமேசுவரம் தீவில் தனுஸ்கோடி, கரையூர் ஓலைக்குடா, முந்தல் முனை, குந்துகால் ஆகிய மீனவ கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவகுடும்பங்கள் பல தலைமுறைகளாக வசித்து வருகின்றனர். ஆனால் இப்பகுதிகளில் மின்சார வசதியே இல்லாமல் மீனவர்கள் தங்களின் குடும்பதோடு ஓலை குடிசைகளில் வாழ்ந்து வருகின்றனர்.

இதனை அறிந்த ராமேசுவரத்தில் இயங்கும் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் மிஷன் ஆஃப் கேலரி அறக்கட்டளையின் மூலம் நூறு குடும்பங்களுக்கு இலவசமாக சூரியசக்தியின் உதவியில் இயங்க கூடிய சோலார் மின்சாதனங்களை வெள்ளிக்கிழமை அப்துல் கலாம் வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அப்துல் கலாம் அண்ணன் முத்து மீரா லெப்பை மரைக்காயர் வழங்கினார்.

இதுகுறித்து தனுஸ்கோடி பகுதியை சார்ந்த மீனவர்கள் கூறியதாவது,

1964ம் ஆண்டு புயல் தாக்கியப் பின்னர் தனுஸ்கோடியில் கடந்த 50 ஆண்டுகளாக எங்களுக்கு மின்சாரம், குடிநீர், சாலை வசதி, மருத்துவம் என்று எவ்விதிமான அடிப்படை வசதிகளும் இல்லாமல் தாய் நாட்டிலேயே அகதிகளாக வாழ்ந்து வந்தோம். எங்களின் குழந்தைகள் சிம்னி விளக்கின் உதவியுடன் படிப்பதை உணர்ந்த அப்துல் கலாம் அறக்கட்டளையை சார்ந்தவர்கள் இருளில் மூழ்கிய எங்கள் தனுஸ்கோடிக்கு ஒளி ஏற்றியுள்ளனர், என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x