Published : 10 Jan 2015 10:45 AM
Last Updated : 10 Jan 2015 10:45 AM
கூட்டுறவு சங்கங்களுக்கான மாநிலத் தேர்தல் ஆணையர் ம.ரா.மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்ந்தெடுக் கப்பட்ட தலைவர்கள், துணைத் தலைவர் கள், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பொறுப்புகளில், மரணம், ராஜினாமா போன்ற பல்வேறு காரணங்களால், 391 கூட்டுறவுச் சங்கங்களில் 487 நிர்வாகக் குழு உறுப்பினர்கள், 133 கூட்டுறவு சங்கங்களில் 85 தலைவர்கள் மற்றும் 54 துணைத் தலைவர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இவற்றில் நிர்வாகக்குழு உறுப்பினர் காலியிடங்களில், 93 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர், 96 பெண்கள், 298 பொதுப் பிரிவினர் தேர்வு செய்யப் பட வேண்டும். இவற்றை நிரப்புவதற்கான இடைத் தேர்தல் ஜனவரி 27-ம் தேதி, காலை 8 மணிக்குத் தொடங்கி, மாலை 5 மணி வரை நடைபெறும். இதற்கான வேட்புமனுக்களை வரும் 19ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரைத் தாக்கல் செய்யலாம். மாலை 5.30 மணிக்குள் வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, மாலை 6 மணிக்கு தகுதியான வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும்.
வேட்புமனுக்களை வரும் 20-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை திரும்பப் பெற்றுக் கொள்ள லாம். அன்று மாலை 5 மணிக்கு வேட்பா ளர்களின் இறுதிப்பட்டியல் வெளியிடப் படும். பதிவான வாக்குகள் வரும் 28-ம் தேதி காலை 10 மணிக்குத் தொடங்கி முடிவுகள் வெளியிடப்படும். 85 தலை வர்கள் மற்றும் 54 துணைத் தலைவர் களுக்கான தேர்தல் பிப்ரவரி 2-ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும்.
இடைத் தேர்தல் நடைபெறவுள்ள கூட்டுறவுச் சங்கங்களின் பெயர் மற்றும் இதர விபரங்கள் குறித்து, அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலரையும், மாவட்ட தேர்தல் பார்வையாளர்களான மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணை பதிவாளர்களையும் தொடர்பு கொள்ளலாம்.
கடந்த ஆகஸ்ட் 2013 முதல் இதுவரை கூட்டுறவுச் சங்கங்களுக்கு எட்டுமுறை இடைத் தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன. இது 9-வது இடைத் தேர்தல் ஆகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT