Published : 06 Jan 2015 09:57 AM
Last Updated : 06 Jan 2015 09:57 AM
சென்னை விமான நிலையத்துக்குள் தமிழக போலீஸார் செல்ல முடியாத தால், விமான நிலையத்தில் பாது காப்பில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. இதனால், விஐபி, விவிஐபி-கள் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
சென்னை விமான நிலை யத்தின் உள்பகுதிக்கு செல்ல விமான நிலைய அதிகாரிகள், ஊழியர்கள், விமான நிறுவனங் களின் அதிகாரிகள், விமானிகள், விமான பணிப் பெண்கள், விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், மத்திய உளவுப்பிரிவு போலீஸார், கியூ பிரிவு போலீஸார், தமிழக போலீஸார், தமிழக உளவு பிரிவு போலீஸார் ஆகியோருக்கு மத்திய விமான போக்குவரத்து பாதுகாப்புத்துறை சார்பில் (பிசிஏஎப் - பீரோ ஆப் சிவில் ஏவியேஷன் செக்யூரிட்டி) அனுமதி பாஸ் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு வழங்கப்பட்ட பாஸ் டிசம்பர் 31-ம் தேதியுடன் காலாவதியாகிவிட்டது. அதன்பின் தமிழக போலீஸார் தவிர மற்ற அனைவருக்கும் புதுப்பிக்கப்பட்ட பாஸ் வழங்கப்பட்டுள்ளது. பாஸ் இல்லாததால், தமிழக போலீஸார் விமான நிலையத்துக்குள் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பில் குளறு படியும், தொய்வும் ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக விமான நிலைய போலீஸார் கூறியதாவது:
பாஸ் காலாவதியாவதற்கு ஒரு மாதம் முன்பே, புதுப்பிக்க விண்ணப் பம் செய்தோம். ஆனால் பிசிஏஎப் அதிகாரிகளோ, தமிழக போலீஸார் புதுப்பிக்க விண்ணப்பிக்கவில்லை என சொல்கின்றனர். தமிழக போலீஸாருக்கு பாஸ் வழங்கக் கூடாது என்று வேண்டும் என்றே எங்களுடைய விண்ணப்பத்தை கிடப்பில் போட்டுள்ளனர். விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருக்கும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கு விஐபி, விவிஐபி யார் யார் என்று தெரியாது. 2 வாரங்களுக்கு முன்பு சென்னை வந்த பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, கனிமொழி எம்பி போன்றவர்கள் கூட யார் என தெரியவில்லை. பொதுமக்களை போலவே, அனைவரையும் நடத்து வார்கள். நாங்கள் தான், முன்னாள் முதல்வர்கள், ஆளுநர், முன்னாள் ஆளுநர், முன்னாள் ஜனாதிபதி, எம்பிக்கள், அரசியல் கட்சி தலைவர்கள், நீதிபதி, ஐஏஎஸ் அதிகாரிகள், சினிமா நடிகர்கள் என அனைவரையும் அடையாளம் காட்டுவோம். தமிழக போலீஸார் உள்ளே செல்ல முடியாத நிலை யால், விஐபி மற்றும் விஐபிக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் விமான நிலையத்தில் பாதுகாப் பிலும் குறைபாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் திடீரென விமான நிலையத்தில் ஏதாவது ஒரு அசம்பாவித சம்பவம் நடைபெற்றுவிட்டால், தமிழக போலீஸ் அதிகாரிகளுக்கு எவ்வித தகவலும் தெரியாது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT