Published : 03 Jan 2015 10:25 AM
Last Updated : 03 Jan 2015 10:25 AM
சென்னை சென்ட்ரலில் இருந்து ஹவுராவுக்கு சிறப்பு ரயிலும், சந்திரகாச்சியில் இருந்து எர்ணாகுளத்துக்கு பிரீமியம் சிறப்பு விரைவு ரயில்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஹவுராவில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு அதிவிரைவு சிறப்பு ரயில் (02839) இயக்கப்படுகிறது. இந்த விரைவு ரயில் வரும் 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் ஹவுராவில் இருந்து மதியம் 12.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 2.25-க்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும். இதேபோல், இந்த விரைவு ரயில் (02840) மறுமார்க்கமாக வரும் 3 (இன்று), 10, 17, 24, 31 ஆகிய தேதிகளில் சென்னை சென்ட்ரலில் இருந்து மாலை 5.20-க்கு புறப்பட்டு மறுநாள் மாலை 6.30-க்கு ஹவுராவை சென்றடையும். இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.
சந்திரகாச்சியில் இருந்து காட்பாடி, கோவை வழியாக எர்ணா குளத்துக்கு பிரீமியம் சிறப்பு விரைவு ரயில் (02853) இயக்கப்படுகிறது. 3 (இன்று), 10, 17, 24, 31 (சனிக்கிழமைகள்) ஆகிய தேதிகளில் சந்திரகாச்சியில் இருந்து மாலை 5.30-க்கு புறப்பட்டு திங்கள்கிழமைகளில் காலை 6 மணிக்கு எர்ணாகுளத்தை சென்றடையும். இதேபோல், மறு மார்க்கமாக இந்த பிரீமியம் சிறப்பு விரைவு ரயில் (02854) எர்ணாகுளத்தில் வரும் 6, 13, 20, 27, பிப்ரவரி 3 ஆகிய தேதிகளில் காலை 8.50-க்கு புறப்பட்டு மறுநாள் இரவு 11 மணிக்கு சந்திரகாச்சியை சென்றடையும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு வரும் 6-ம் தேதி முதல் தொடங்குகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT