Published : 02 Jan 2015 12:47 PM
Last Updated : 02 Jan 2015 12:47 PM
வங்கதேச சிறையில் உள்ள இந்திய மீனவர்கள் 26 பேர் விரைவில் விடுதலையாகின்றனர்.
கடந்த நவம்பர் 17-ம் தேதி கொல்கத்தா அருகே உள்ள பெட்டு வாகாட் எனும் இடத்தில் இருந்து 3 விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்ற 26 மீனவர்களை வங்கதேச கடல் படையினர் கைது செய்தனர். இவர்களில் 24 பேர் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள். ஒருவர் கேரளம், மற்றொருவர் ஆந்திராவை சேர்ந்தவர். மீனவர் களை மீட்க தமிழ்நாடு மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டன.
இந்நிலையில் வங்கதேச இந்திய தூதரக அதிகாரி ஜே.பி. சிங், தமிழ்நாடு மீனவர் வளர்ச்சி அறக்கட்டளைத் தலை வர் ஜஸ்டின் ஆன்டணிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘26 மீனவர்களையும் விடுதலை செய்வதற்கான உத்தரவை வங்கதேச அரசு வழங்கி யுள்ளது. ஜனவரி 19-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு அன்றே விடுவிக்கப் படுவர். படகுகளும் விடுவிக்கப் படும்’என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT