Published : 05 Jan 2015 09:09 AM
Last Updated : 05 Jan 2015 09:09 AM
நீலகிரி மாவட்டம், வடக்கு வனக் கோட்டத்துக்குட்பட்ட இருளர் ஆதிவாசி கிராமப் பகுதி சொக்க நள்ளி. இப்பகுதியில் பயிரிடப் பட்டுள்ள ராகி, சோளம், பீன்ஸ் ஆகிய பயிர்களை, வன விலங்கு களிடமிருந்து காக்க மின்வேலி அமைத்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று காலை அப்பகுதியில் ஆண் யானை இறந்தது குறித்து வனத் துறையினருக்கு தகவல் கிடைத் தது. இதையடுத்து வடக்கு வனக் கோட்ட உதவி வனப் பாதுகாவலர் பிரேம்குமார், சரகர்கள் பெரிய சாமி, செல்வம் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு செய் தனர். இதில் மின்சாரம் பாய்ந்து யானை உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, தோட்டத்தில் உள்ள பயிர்களை காக்க மின்வேலி அமைக்கப்பட்டது தொடர்பாக ராமன் என்பவரை வனத் துறை யினர் கைது செய்தனர்.
முதுமலை கால்நடை மருத்து வர் விஜயராகவன் தலைமையி லான மருத்துவர்கள், பிரேதப் பரிசோதனை மேற்கொண்டனர்.
உதவி வனப் பாதுகாவலர் பிரேம்குமார் கூறுகையில், இறந்த ஆண் யானைக்கு 25 வயது இருக்கலாம். தோட்டத்தில் மின் வேலி பயன்படுத்தியது தொடர் பாக ராமன் என்பவர் கைது செய்யப் பட்டுள்ளார் என்றார்.
ஆதிவாசி மக்கள் கூறுகை யில், வன விலங்குகள் தோட்டத் துக்குள் புகுந்து பயிர்களை சேதப் படுத்துவதால், நஷ்டம் ஏற்படு கிறது. ஆதிவாசி மக்களை விவ சாயம் செய்ய அறிவுறுத்தும் அரசு, பயிர்களை பாதுகாக்க உரிய நட வடிக்கை எடுக்கவேண்டும் என்றனர். முன்னாள் சரகரும், நீலகிரி கானுயிர் சங்க உறுப்பினரு மான கார்பீல்டு கூறுகையில், ஆதி வாசிகள் விவசாயம் செய்ய அரசு உதவுகிறது. ஆனால், பயிர்களை பாதுகாக்கவும், அறுவடை செய்து சந்தைப்படுத்தவும் உதவாததால், வன விலங்குகளிடமிருந்து பயிர் களைப் பாதுகாக்க, மின்வேலியை அமைக்கும் நிலைக்கு ஆதி வாசிகள் தள்ளப்பட்டுள்ளனர் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT