Published : 28 Jan 2015 08:49 AM
Last Updated : 28 Jan 2015 08:49 AM
ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக, திமுக, பாஜக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் என 4 பிரதான கட்சிகள் களத்தில் குதித்து, 4 முனை போட்டியை உருவாக்கியுள்ளன.
ஸ்ரீரங்கம் தொகுதியில் 2011-ல் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று முதல்வரான அதிமுக பொதுச் செயலர் ஜெ.ஜெயலலிதா, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தண் டனை பெற்றதால் தனது எம்எல்ஏ பதவியையும், முதல்வர் பதவியை யும் இழந்தார்.
இதைத் தொடர்ந்து இந்தத் தொகுதியில் இடைத்தேர்தல் அறி விக்கப்பட்டு பிப்.13-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. அதிமுக சார்பில் மாநகராட்சி கவுன்சி லராக இருந்த எஸ்.வளர்மதி, திமுக சார்பில் ஏற்கெனவே ஜெய லலிதாவை எதிர்த்துப் போட்டியிட்ட என்.ஆனந்த், பாஜக சார்பில் எம்.சுப்பிரமணியம், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் கே.அண்ணாதுரை ஆகியோர் பிரதான வேட்பாளர்களாக களத் தில் உள்ளனர். இவர்கள் தவிர மக்கள் பாதுகாப்புக் கழக நிறு வனர் டிராபிக் ராமசாமி, ஜனதா தளம்(ஐக்கியம்) சார்பில் ஹேம நாதன் உள்ளிட்ட பிற கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை கள் என மொத்தம் 46 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
அதிமுக...
கடந்த 2011 தேர்தலில் திமுக வேட்பாளர் ஆனந்த்தை விட 41,848 வாக்குகள் அதிகமாக பெற்று ஜெயலலிதா வெற்றி பெற்றார்.
கடந்த தேர்தலைவிட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளரை வெற்றி பெறச் செய்யவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு களப் பணியில் இறங்கியுள்ளனர் அதிமுக அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள். 50 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவினர் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள் ளனர்.
திமுக...
இதேபோன்று திமுக சார்பிலும் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் முன்னாள் அமைச் சர்கள், முன்னாள், இன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள், மக்களவை, மாநிலங்களவை உறுப் பினர்கள், மாவட்டச் செயலர்கள் என மொத்தம் 82 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் இன்று(ஜன.28) முதல் அவரவர்களுக்கு ஒதுக்கப் பட்ட இடங்களுக்குச் சென்று தேர்தல் பணிகளை தொடங்க வுள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.
பாஜக...
பிரதமர் மோடியின் பெயரையும், தேமுதிகவின் பலத்தையும் கொண்டு களத்தில் இறங்கியுள்ள பாஜகவும் தொகுதியில் உள்ள 322 வாக்குப்பதிவு மையங்களுக்கும் தலா ஒரு பொறுப்பாளரை நிய மித்து, கடந்த தேர்தலில் பெற்ற வாக்குகளைவிட இந்த முறை 10 மடங்கு அதிக அளவில் வாக்குகளைப் பெற வேண்டும் என்ற முனைப்போடு பணிகளை தொடங்கியுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.தர் தலைமையில் தேர்தல் பணிக்குழுவை அமைத்துள்ளது. மேலும், ஜன.29-ம் தேதி கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் ரங்கத்தில் நடைபெறவுள்ள செயல்வீரர்கள் கூட்டத்தில் தேர்தல் பிரச்சார வியூகங்கள் வகுக்கப்படும் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
ஸ்ரீரங்கம் தொகுதி தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக நடை பெறவுள்ள இந்த இடைத் தேர்தல் அனைத்துக் கட்சிகள் மத்தி யிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த இடைத் தேர்தலை காங்கிரஸ், பாமக, தமாகா, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் புறக்கணித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
டிராபிக் ராமசாமி, ஜனதா தளம் சார்பில் ஹேம நாதன் உள்ளிட்ட பிற கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைகள் என 46 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT