Published : 06 Jan 2015 10:01 AM
Last Updated : 06 Jan 2015 10:01 AM
உலக மக்கள் தொகையில் சரிபாதியாக உள்ள பெண்களின் பங்கை அனைத்து தளங்களிலும் அதிகரிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் கூறியுள்ளார்.
சென்னை பல்கலைக்கழக இந்திய வரலாற்றுத் துறை சார்பாக முன்னாள் நீதிபதி ராஜகோபாலன் நினைவு சொற்பொழிவு கருத் தரங்கம் நேற்று நடந்தது. இதில் கலந்துகொண்ட சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியன், ‘இந்திய சட்டத் துறையில் மேற்கொள்ளப் பட்ட பெண்களுக்கான விடுதலை மற்றும் ஆளுமைத்திறன்’ என்ற தலைப்பில் பேசியதாவது:
பெண் சுதந்திரம்
நம் நாட்டில் பெண்களுக்கான சுதந்திரம் மற்றும் ஆளுமை திறன்கள் வேத காலங்களில் கடை பிடிக்கப்பட்டுள்ளது.
ஆனால், மத்திய காலத்தில் ஏற்பட்ட சில மாற்றங்கள் காரணமாக பெண் களின் உரிமைகள் பாதிக்கப் பட்டது. பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கீழ் இந்தியா இருந்தபோது பெண்களின் சுதந்திரம் குறித்த சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப் பட்டன. அதன் முக்கிய நடவடிக் கைகளாக குழந்தைத் திரு மணம் தடுப்பு, சதி முறை ஒழிப்பு போன்றவை மேற்கொள்ளப் பட்டன.
அதேபோல் சுதந்திர இந்தி யாவில் பெண்களுக்கு சொத் துரிமை, விவாகரத்து உள்ளிட்ட உரிமைகள் கிடைத்தது. தற்போது பெண்கள் பல முக்கிய கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைவர்களாக உள்ளனர். இருந்தும் பெண் குழந்தைகள் இறப்பு, பெண் களுக்கு எதிரான பாலியல் வன் முறைகள், கடத்தல் உள்ளிட்ட சம்பவங்களும் நடக்கின்றன. ஐ.நா சபை அறிக்கையின்படி பெண் களுக்கு எதிரான குற்றங்கள் நடக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.
ஆளுமைத் திறன் வேண்டும்
சமூகத்தில் உள்ள அனைத்து தளங்களிலும் பெண்களின் பங்கை அதிகப்படுத்த வேண் டும். அதன்மூலம் அவர் களின் ஆளுமைத்திறன் மேம் படுத்தப்படுவதுடன் பாது காப்பையும் உறுதிப்படுத்த முடியும்.
இவ்வாறு நீதிபதி ராம சுப்பிரமணியன் கூறினார். நிகழ்ச்சியில் சென்னை பல்கலைக் கழக இந்திய வரலாற்று துறை தலைவர் (பொறுப்பு) குப்பு சாமி மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT