Published : 13 Jan 2015 09:43 AM
Last Updated : 13 Jan 2015 09:43 AM
தை மாதம் முதல் நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாட வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியிருப்பதற்கு, இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, இந்து முன்னணி அமைப்பாளர் இராம. கோபாலன் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
சங்க இலக்கியங்கள் முதல் இன்றைய நவீன இலக்கியங்கள் வரை அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதும், போற்றப் படுவதும் தமிழ்ப் புத்தாண்டு சித்திரை முதல் நாளே. இது அறிவியல் பூர்வமானது என் பது உலகறிந்தது. இதனை மாற்றி தை மாதம் முதல் நாளை தமிழப் புத்தாண்டாக கொண் டாட திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்திருப்பது, தமிழர்களின் பாரம்பரிய உண் மையை மங்கச் செய்வதாகும். இதை இந்து முன்னணி கண்டிக்கிறது. தமிழ்ப் புத்தாண்டை ஆங்கிலப் புத்தாண்டோடு இணைத்து தமிழுக் கும், தமிழருக்கும் துரோகம் செய்ய நினைத்த திமுக ஆட்சி கொண்டு வந்த தை முதல் நாள் என்பதை மக்கள் ஏற்றுக் கொள்ள வில்லை. தமிழர்கள் கொண்டாடும் பண்டிகை, விழாக்களை கேலி செய்வதும், மேற்கத்திய நாகரீ கத்தை புகுத்துவதும் திமுகவின் தந்திரம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT