Published : 03 Jan 2015 11:47 AM
Last Updated : 03 Jan 2015 11:47 AM

தனியார் பள்ளிகளில் ஏழை குழந்தைகளுக்கு 25% இடம் : கண்காணிக்க அரசு உத்தரவு

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி, தனியார் பள்ளிகள் ஏழைக் குழந்தைகளுக்கு 25 சதவீத இடங்களை ஒதுக்குவதைத் தீவிரமாகக் கண்காணித்து செயல் படுத்த, பள்ளிக்கல்வி, தொடக்கக் கல்வி மற்றும் மெட்ரிக்குலேஷன் கல்வித் துறை இயக்குநர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

தனியார் பள்ளிகளில் ஏழை மற்றும் வசதியில்லாத குடும்பத் தினரின் குழந்தைகள் படிக்க முடியாத சூழல் உள்ளது.

தனியார் பள்ளிகளில் அளவுக்கு மீறிய கல்விக் கட்டணத்தைக் கட்ட முடியாததால், வசதியில்லா தவர்கள் கடன் வாங்கி, தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளி களில் படிக்க வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தனியார் கல்விக் கூடங்களில் 25 சதவீத இடங்களை, ஏழை மற்றும் வசதியில்லாத குடும் பத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு ஒதுக்க, மத்திய அரசு கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை கடந்த 2009ல் கொண்டு வந்தது.

இந்தச் சட்டத்தின் படி, தனியார் பள்ளிக்கூடங்கள் 25 சதவீத இடங் களை ஏழைக் குழந்தைகளுக்கு ஒதுக்க வேண்டும். அந்தக் குழந்தை களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே பள்ளிக்கூடங்களுக்கு நேரடி யாக வழங்கும். இந்தச் சட்டம் கடந்த ஆண்டுகளில் சரிவர செயல்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

இந்நிலையில், கட்டாய மற்றும் இலவசக் கல்வி உரிமைச் சட்டம் 2009ஐ தீவிரமாக செயல்படுத்த, தனியார் பள்ளிக்கூடங்களுக்கு அறிவுறுத்துமாறு, பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலர் சபிதா பிறப்பித்த உத்தரவில், ‘‘கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை தனியார் பள்ளிகள் தீவிரமாக செயல்படுத் துவது குறித்து, பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்.

இதற்காக பள்ளிக் கல்வித் துறை இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்குநர் மற்றும் மெட்ரிக்கு லேஷன் பள்ளிகள் இயக்குநர் ஆகியோருக்கு உரிய அதிகாரம் அளிக்கப்படுகிறது. இவர்கள் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொண்டு, கல்வி உரிமைச் சட்டங்களை தனியார் பள்ளிகள் உரிய முறையில் செயல்படுத்துவது குறித்து, அரசுக்கு அறிக்கை தர வேண்டும்’ என கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x