Published : 03 Jan 2015 10:01 AM
Last Updated : 03 Jan 2015 10:01 AM
பாஜக நிர்வாகி வெட்டப்பட்டதைத் தொடர்ந்து, நாகர்கோவில் அருகே குறிப்பிட்ட பிரிவினரின் வீடுகள், மினி பஸ், ஷேர் ஆட்டோ ஆகியவற்றை அக்கட்சி யினர் சேதப்படுத்தினர். பதற் றத்தை தணிக்க போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நாகர்கோவிலை அடுத்த வெள்ளாடிச்சிவிளையைச் சேர்ந்தவர் முத்துராமன் (45). கன்னி யாகுமரி மாவட்ட பாஜக வர்த்தக அணி தலைவராக உள்ளார். ரியல் எஸ்டேட் தொழி லில் ஈடுபட்டுள்ளார். நேற்று காலை மோட்டார் சைக்கி ளில் நாகர்கோவில் சென்ற போது, லாலாவிளை அருகே அவரை, மூன்று பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டியது. படுகாயமடைந்த அவர், நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். கோட்டாறு இன்ஸ்பெக்டர் சங்கர்கண்ணன் விசாரணை நடத் தினார். தொழில் போட்டி அல்லது அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தாக்குதல் நடைபெற்றதா? என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மத்திய இணைய மைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக மாநில செயற்குழு உறுப் பினர் எம்.ஆர்.காந்தி, மாவட்டத் தலைவர் கணேசன் மற்றும் கட்சியினர் முத்துராமனிடம் நலம் விசாரித்தனர்.
வன்முறை
இதனிடையே வெள்ளாடிச்சி விளை சந்திப்பில் உருட்டுக்கட்டை களுடன் திரண்ட அப்பகுதியைச் சேர்ந்த கும்பல், அந்த வழியாக வந்த மினி பஸ்ஸின் கண் ணாடியை நொறுக்கியது. பயணிகள் அலறியடித்து இறங்கி ஓடினர். அவ்வழியே வந்த ஒரு ஷேர் ஆட்டோவும் நொறுக்கப் பட்டது. குறிப்பிட்ட பிரிவினரின் 10-க்கும் மேற்பட்ட வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள் கல்வீசி உடைக்கப்பட்டன. கன்னியா குமரிக்கு சென்று கொண்டிருந்த அரசு பஸ் ஒன்று பொற்றையடியில் மர்மநபர்களால் கல்வீசி உடைக் கப்பட்டது.
மறியல்
பாஜக நிர்வாகிகள் மற்றும் வெள்ளாடிச்சிவிளை ஊர் மக்கள், கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் இடலாக்குடி பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். கடுமையான போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது. அவர்களிடம், நாகர்கோவில் நகர டிஎஸ்பி பேச்சிமுத்து பாண்டியன் பேச்சுவார்த்தை நடத்தி னார். அதன்பின் போராட்டம் கைவிடப்பட்டது. மாவட்ட எஸ்.பி மணிவண்ணன் உத்தரவின் பேரில் நாகர்கோவில் - பறக்கை வழித்தடத்தில் 10 இடங்களில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT