Published : 20 Apr 2014 10:51 AM
Last Updated : 20 Apr 2014 10:51 AM
தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று மோடி பிரதமரானால், 2 ஆண்டுகளில் மக்களின் அடிப் படை பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்பேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.
வடசென்னை தொகுதி தேமுதிக வேட்பாளர் எம்.சவுந்தர பாண்டியனை ஆதரித்து எண்ணூரில் சனிக்கிழமை மேற் கொண்ட பிரச்சாரத்தின் போது விஜயகாந்த் பேசியதாவது:
வடசென்னை, வஞ்சிக்கப்பட்ட சென்னையாக உள்ளது. இங்கு தொழிற்சாலைகள், அனல்மின் நிலையம், துறைமுகம் ஆகிய வைகளால் சுற்றுச்சூழல் மாசடைந்துள்ளது. நிலத்தடி நீரும் பாதிப்படைந்துள்ளது. தூய்மை யான குடிநீர் கிடைப்பதில்லை. இதனால் மக்கள் தோல் வியாதி, தொற்று நோய், கிட்னி பாதிப்பு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தொகுதி எம்.பி.யோ அந்நிய நிறுவனங்களோடு சேர்ந்து கொண்டு பணம் சம்பாதிக்கிறார்.
மக்களுடைய அடிப்படை பிரச்சினையைத் தீர்க்கக் கூடிய மேயர் என்ன செய்கிறார் என்றே தெரியவில்லை. மனிதநேய மையத்தைக் கவனிக்கும் அவர், மக்களின் அடிப்படைப் பிரச்சி னைகளைத் தீர்க்கவில்லை. அரசும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதற்கெல்லாம் முடிவு கட்ட அனைத்துத் தொகுதிகளிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்று மோடி பிரதமராக வேண்டும். மோடி பிரதமரானால் 2 வருடத்தில் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன்.
தேர்தல் பிரச்சாரத்துக்காக நங்க நல்லூர் சென்ற முதல்வர் ஜெய லலிதா, அங்குள்ள ஒரு கோயிலுக்கு வெளியே நின்றிருந்தவர்களுக்கு தலா ரூ.100 கொடுத்துள்ளார். இது தேர்தல் விதி மீறல் இல்லையா? தேர்தல் கமிஷன் என்ன நட வடிக்கை எடுக்கப் போகிறது? இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT