Published : 14 Apr 2014 06:41 PM
Last Updated : 14 Apr 2014 06:41 PM

குஷ்பு தயவில் திமுக: நடிகை விந்தியா கிண்டல்

தி.மு.க.-வினர் இன்று குஷ்புவை நம்பியிருப்பதாக நடிகை விந்தியா திருப்பூரில் கிண்டலடித்தார். திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து நடிகை விந்தியா, திருப்பூர் நகர்ப் பகுதியில் சனிக்கிழமை மாலை பேசியதாவது:

அதிமுக மற்றவர்களைப் போல குடும்பத்துக்காக ஆரம்பித்த கட்சி அல்ல; மக்களுக்காக தொடங்கப்பட்ட கட்சி.

தமிழர்களை ஏமாற்றியவர் கருணாநிதி. தமிழர்களை கைவிடமாட்டேன் என்று அவர் சொன்னதைக் கேட்டு 2006ல் மக்கள் வாக்களித்தார்கள். ஆனால், உலக அளவிலான ஊழல் செய்தார். திமுகவினர் இன்று குஷ்புவை நம்பி உள்ளனர் என்றார்.

திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் பொறுப்பாளர்களான வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன், மேயர் அ.விசாலாட்சி ஆகியோர் உடன் இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x