Published : 06 Jan 2015 09:53 AM
Last Updated : 06 Jan 2015 09:53 AM
சென்னையில் இரு வேறு இடங்களில் உள்ள வீடுகளில் 67 பவுன் நகைகளும், நிதி நிறுவனத்தில் ரொக்கமும் திருடு போயின.
சென்னை ராயப்பேட்டை பேகம் சாகிப் 2-வது தெருவில் வசிப்பவர் முகம்மது பயாஸ். இவர், நேற்று முன்தினம் மாலை குடும்பத்தினருடன் மெரினா கடற்கரைக்குச் சென்றுவிட்டு இரவில் வீடு திரும்பினார். அப்போது, முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறக்கப்
பட்டு, அதிலிருந்த 40 பவுன் நகைகளை யாரோ திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது. தடயவியல் நிபுணர்கள் தடயங்களைப் பதிவு செய்தனர். ஐஸ்ஹவுஸ் போலீஸார் விசாரிக்கின்றனர்.
மறைத்து வைத்திருந்த பீரோ சாவியை எடுத்து திருடியுள்ளதால், முகம்மது பயாஸுக்கு நன்கு அறிமுகமானவர்கள்தான் திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
27 பவுன் திருட்டு
கொட்டிவாக்கம் வெங்கடேச புரத்தைச் சேர்ந்தவர் முருகன் (30). மருந்துப் பொருட்கள் விற்பனை செய்து வரும் இவர், நேற்று முன்தினம் வீட்டைப் பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் வெளியே சென்றார். பின்னர், இரவில் வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவிலிருந்த 27 பவுன் நகைகள், ஒரு கிலோ வெள்ளிப் பொருட்கள் திருடு போயிருப்பது தெரிய வந்தது.
நிதி நிறுவனத்தில் திருட்டு
பாலவாக்கம் அண்ணா சாலையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்துக்குள், மொட்டை மாடி வழியாக புகுந்த நபர்கள், பீரோவை உடைத்து அதிலிருந்த ரூ. 12 ஆயிரத்தை திருடிச் சென்றனர். அங்கிருந்த பெட்டகத்தை உடைக்க முடியாததால், அதிலிருந்த பல லட்சம் மதிப்புள்ள நகைகள் தப்பின.
இந்த இரு திருட்டுச் சம்ப வங்கள் குறித்தும் நீலாங்கரை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT